பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகல் 294

புடையல்


புகல் = உடல், விருப்பம், இருப்பிடம், சொல், தஞ்சம், வெற்றி, புகுதல், புகழ், கொண்டாடுதல், துணை
புகல்வி = மிருகங்களில் ஆண்
புகல்வு = மனச்செருக்கு, விருப்பம்
புகவு = உணவு
புகழாவாகை = அகத்தி, கர்வம்
புகழ்பொருள் = உவமேயம்
புகறல் = சொல்லல், விரும்புதல்
புகற்சி = விருப்பம், காதல்
புகா = உணவு
புகார் = காவிரிப்பூம்பட்டினம், சுழிமுனை, ஆற்றுமுகம்
புகுடி = புருவம், ஒருமாதர் காதணி
புகுதி = சம்பவம், வழி, வருவாய், வீட்டுவாயில், நுண்ணறிவு
புகை = துாபம், யோசனை, தூரம்
புக்ககம் = மாமியார் விடு
புக்கசன் = சண்டாளன், கீழோன்
புக்கில் = உடல், வீடு, புகலிடம்
புங்கம் = மெல்லாடை, அம்பு, அம்பினடி, சிறுதுகில், குவியல், உயர்ச்சி, சீலை
புங்கவம் = நந்தி, இடபம்
புங்கவர் = வானோர், உயர்ந்தோர்
புங்காநுபுங்கம் = அம்பின் பின், அம்பு தொடர்கை
புசங்கம் = பாம்பு
புசல் = குச்சுமட்டை
புச்சம் = வால்
புஞ்சம் = திரட்சி, கூட்டம்
புஞ்சவனம் = கருபச்சடங்கு
புடகம் = இலைத்தொன்னை, தாமரை
புடம் = கண்ணிமை, மூடி, எரித்துப் பக்குவப்படுத்துதல்
புடவி = பூமி
புடை = பக்கம், முறை, அடி, பகுதி, ஒலி, பகை, போர், வீக்கம்
புடைத்தல் = அடித்தல், குத்துதல், நீந்துதல், வீங்குதல், துவைத்தல், ஆரவாரித்தல்
புடை நூல் = சார்பு நூல்
புடைபெயர்தல் = பக்கத்திற் போதல், கீழ் மேலாதல், அசைதல், வெளியேறுதல்
புடையல் = பனை மாலை