பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பைங்கூழ்

307

பொங்கழி



பைங்கூழ் = பயிர், விளைநிலம் பைசாசமணம் = துயின்றாளையாவது களித்தாளையாவது மூத்தாளையாவது, சென்று கூடுங்கூட்டம் பைசாசம் = இரும்பு, ஒரு வகைமணம், யுத்த நிலை பைஞ்சேறு = சாணம் பைஞ்ஞிணம் = பச்சை இறைச்சி பைஞ்ஞிலம் = மக்கட்பரப்பு, படைத் தொகுதி, பசிய நிலம் பைதல் = துன்பம், ஈரம், பசுமை பைதிரம் = காடு பைதிருகம் - பிதாவழியில் வரும் பொருள் பைது = பசுமை, ஈரம் பைத்தல் = சோபித்தல், மிகுதல், பசுமையாதல், பாம்பு படம் விரித்தல், பொங்குதல், மிகுதல் பைந்ததார் = பசியபூமாலை பைமறித்தல் = பையின் உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்பல், பையின் வாயைக்கட்டுதல் பைய = மெல்ல பையாத்தல் = வருந்துதல் பையாப்பு = துன்பம் பையுள் = நோய், துன்பம் பைசவம் = அச்சம் பைவரல் = துயருறல்

பொ

பொகில் = அரும்பு பொகுட்டு = சேற்றில் எழும் குமிழ், மலை, தாமரைக்கொட்டை, குமிழ் பொகுவல் = ஒரு பறவை பொக்கசம் = திரவியசாலை, திரவியம் பொக்கணம் = ஒருவகைப்பை பொக்கம் = பொய், பொலிவு, குற்றம், வஞ்சகம், மிகுதி பொக்கு = பொள்ளல், பொந்து, குற்றம் பொங்கடி = யானை, சிங்கம் பொங்கத்தம் = அபயக்குரல் பொங்கர் = இலவமரம், கட்டுமலை, மரக்கொம்பு, மலை, வாடற்பூ, பழம்பூ, இளமரச் சோலை பொங்கல் = உயர்ச்சி, மிகுதி, கள், பொங்குதல், பருமை பொங்கழி = துாற்றாத நெற்பொலி