பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306


பே

306


பே = அச்சம், நுரை, மேகம் பேலம் = பயம், மேல் பேகம் = தவளை, மேகம் பேசகம் = ஆந்தை, மேகம், யானை பேசகி = யானை பேசலம் = உலக்கை, குயில், ஊமை பேசி = தசை, நரம்பு, இடி, அரும்பு பேசிலம் = யானை பேடகம் = கூடை பேடு = அலி, மன்மதன், ஆடல், ஊர், நடுவிரல் பேணலர் = பகைவர் பேணுதல் = ஒத்தல், உபசரித்தல், காத்தல், போற்றுதல், விரும்பல், மதித்தல், வழிபடல் பேணார் = பகைவர் பேதறுத்தல் = ஒழித்தல் பேதித்தல் = வேறாக்கல் பேது = அறியாமை, வருத்தம், பைத்தியம் பேதுறல் = வருந்தல், மயங்குதல் பேதை = அறிவிலி, ஏழு வயதுடை பெண், தரித்திரன், கள் பேயமன்று = பர்னசாலை பேய்த்தேர் = கானல் நீர் பேரம் = உடல், பேரிகை பேரவம் = நரி பேராண்மை = அரியசெயல் பேரியல் = பெருந்தன்மை பேரிளம் பெண் = நாற்பது வயது பெண் பேரின்பம் = மோட்சம் பேர்த்தும் = மீண்டும் பேருசமுத்திரம் = தீ, சூரியன், மலை பேரூர் = மருத நிலத்தூர் பேளிகை = எச்சில் பேழை = பெட்டி, பெருமை பேழ் = பெருமை பேழ்கணித்தல் = அஞ்சுதல், கண்மூடுதல், மருண்டு விழித்தல் பேழ்வாய் = பெரியவாய், பிளந்தவாய் பேறு = இலாபம், செல்வம், பெறுதல், பெற்ற பொருள், பிரசவகாலம் பேனம் = நுரை

பை

பை = அழகு, பச்சைநிறம், பாம்பின் படம், சாக்கு, பொக்கணம், வலி பைக்கம் = பிச்சை பைங்கண் = குளிர்ந்தகண், பசுமை