பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்கிணி

316

மடப்பிடி





மங்கிணி
= மண்ணுணி
மங்குல் = மூடுபனி, ஆகாயம், திசை, இருள், மேகம்
மங்கை = பெண், பதின்மூன்று வயதுடைய பெண்
மங்கைபங்காளன் = சிவபிரான்
மங்கைபாகான் = சிவபிரான்
மசகம் = கொசு, நீர்த்துருத்தி
மசங்குதல் = மயக்குதல், ஒளிகுறைதல், கசங்குதல்
மசகு = வண்டிக்கீல்
மசரதம் = பெய்த்தேர்
மசி = மை
மசிகம் = பாம்புப்புற்று, புற்று
மசுரம் = கடலை
மச்சரம் = பொறாமை
மச்சு = குற்றம், மேல்தளம்
மச்சை = மூளை
மஞ்சம் = கட்டில்
மஞ்சரி = தளிர், பூங்கொத்து, மாலை, துளசி, ஒழுக்கம், முத்து
மஞ்சனம் = முழுகல்
மஞ்சன் = மைந்தன், ஆண்மகன்
மஞ்சாடி = இரண்டு குன்றுமணி கொண்ட நிறை
மஞ்சிகன் = நாவிதன்
மஞ்சிகை = கொட்டாரம், காதணிவகை, காதுகுண்டலம், பெட்டி
மஞ்சிரம் = கால் ஆழி
மஞ்சீரம் = காற்சிலம்பு
மஞ்சு = அழகு, பனி, மேகம், யானை, முதுகு, வலி
மஞ்சுபாஷிணி = நயவசனி
மஞ்சுவாணி = கௌரி
மஞ்சுனம் = அழகு, மிருதி
மஞ்ஞை =மயில்
மடக்கொடி = பெண்
மடக்கல் = ஒழுக்கம், ஊழிக்காலம், இயமன், சிங்கம், இடி, அடக்கல், வளைத்தல்
மடக்கு = மண்ணகல், மூலை முடுக்கு, ஒருவகை செய்யுள் அணி
மடங்கல் = இடி, இயமன், சிங்கம், யுகமுடிவு, வடவமுகாக்கினி, வியாதி, முடிவு, மடங்குதல்
மடங்கு = நோய், அளவு
மடங்கலூர்தி = பராசக்தி
மடநல்லார் = பெண்கள்
மடந்தை = பத்தொன்பதாண்டு பெண், பெண்
மடப்பிடி = பெண்யானை