பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாரதன்

315

மங்களாசாசனம்


 மகாரதன் = 1000 வீரரை வெல்லவல்ல ஒரு வீரன் மகார் = மக்கள் மகாவாக்கியம் = தத்துவமசி உபநிடதங்களுள் ஒன்று மகி = பசு, பூமி மகிடசங்கரி = துர்க்கை மகிடம் = எருமை மகிணன் = கணவன், மருதத் தலைவன் மகிதலம் = பூமி மகிபதி = அரசன் மகிபன் = அரசன் மகிமா = சித்து, மிகவும் பருத்தல் மகிழ் = கள், மகிழ்ச்சி, மர வகை மகிழ்நன் = கணவன், மருதத் தலைவன் மகீ = பூமி மகீதலம் = பூமி மகீபதி =அரசன் மகீருகம் = மரம், கீரை, தாவரம் மகுடம் = சிகரம், முடி, பறைவகை மகுடவர்த்தனன் = முடி தரிக்கும் அரசன் மகுளி = ஓசை, செடிகளுக்கு வரும் நோய் மகேசன் = சிவபெருமான் மகேசுவரன்= சிவபிரான் மகேந்திரன் = இந்திரன் மகோததி = பெருங்கடல் மகோதிரம் = பெருவயிறு, பூதம் மகோந்நதம் = அதிக உயரம் மகெளடதம் - சிறந்த மருந்து மகெளடதி = சிறந்த மூலிகை மக்கம் - நெய்வோர் தறி மக்கட் கதி = மக்கட் பிறப்பு மக்கினம் = அமிழ்ந்தல்,வெட்கம் . மங்கலம் = சுபம், நன்மை, கலியாணம், தாலி, சோபனம், பொலிவு, ஆக்கம், இஷ்டசித்தி, சந்தனம், வாழ்த்து மங்கலவயினி = ஆலத்தி மங்கலவெள்ளை = சந்தனக்குழம்பு, ஒருவகைப் பிரபந்தம் மங்கலன் = செவ்வாய், நாவிதன் மங்கலை = கற்புடையாள், சுமங்கலி மங்களகரன் = சுபமுண்டாக்குவோன் மங்களம் = சுபகாரியம், வாழ்த்து மங்களாசாசனம் = மங்கள வாழ்த்து