பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மந்தைக்கல்

321

மராம்





மந்தைக்கல்
= ஆவுறிஞ்சு தூண், தினைவுபோக விலங்குகள் உறாய்ந்து கொள்ள அமைத்த தூண்
மந்தைவெளி = மேய்ச்சல் நிலம்
மம = என்னுடையது
மமகாரம் = எனது என்று கூறும் அவா, கர்வம்
மம்மர் = துன்பம், மயக்கம், கல்லாமை
மயம் = அழகு, வடிவம், தன்மை, செருக்கு, ஒட்டகம், நிறைவு, பொருள், மகிழ்ச்சி, சொரூபம்
மயிர் = காமுகன், அறிவீனன், பித்தம்பிடித்தவன்
மயல் = ஆசை, பேய், மயக்கம், காம இச்சை
மயற்கை = செத்தை
மயன் = தேவதச்சன், சிற்பி
மயானவைராக்கியம் = இறந்தவர்களைக்கண்ட போது உலகையும் செல்வத்தையும் வெறுத்துக் கூறிக்கொள்ளும் சுபாவம்
மயிடமத்தனி = துர்க்கை
மயிடம் = எருமை
மயிடற்செற்றாள் = துர்க்கை
மயிர்க்கால் = மயிர்த்துவாரம்
41
மயிர்க்கூச்சம் = புளகம்
மயிர்வினைஞன் = அம்பட்டன்
மயிலை = இருவாட்சி, மீன், கருமை கொண்ட வெண்மை, அழுக்கு, மயிலாப்பூர்
மயூரம் = மயில்
மரகதவல்லி = பார்வதி
மரக்கலம் = கப்பல்
மரக்கா = சோலை
மரக்கால் = துர்க்கை ஆடிய கூத்து
மரக்கோவை = கப்பல்
மரச்செறிவு = சோலை
மரணை = நினைவு, சாதல்
மரநார் = மரவுரி
மரபு = பழமை, முறைமை இலக்கணம், வம்சம், தன்மை, மேம்பாடு, வழிபாடு
மரமூலம் = மரவேர்
மரம் = விருட்சம், மூலிகை, மரக்கலம், பறைவகை
மரல் = மருள்
மரவம் = குங்கும மரம், வெண்கடம்பு
மரவினைஞர் = தச்சர்
மரா = ஆச்சாமரம், கடம்பு
மராட்டம் = பெண்மயிர், பிறமயிர்
மராமரம் = ஆச்சாமரம், கடம்புமரம்
மராம் = வெண்கடம்பு