பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மதிநாள்

320

மந்துரை





மதிநாள்
= மிருகசீரிடம்
மதிமகன் = புதன்
மதியம் = மத்தியானம்
மதிரை = கள்
மதினல்லோர் = மந்திரியார்
மது = செவ்வி, கள், தேன், நீர், மகரந்தம், வசந்த காலம், மயக்கமுள்ளது
மதுகரம் = வண்டு, தேனீ
மதுகை = வலிமை, அறிவு
மதுங்குதல் = இனிமையாதல்
மதுசூதனன் = திருமால்
மதுபம் = வண்டு
மதுபர்க்கம் = தயிர், நெய், பால் இவற்றால் ஆன உணவு
மதுரசம் = கரும்பு, முந்திரிகை
மதுரம் = அழகு, இனிமை, நஞ்சு, துத்தநாகம்
மதூகம் = இரும்பை, எட்டி
மத்தகம் = நெற்றி, யானைத்தலை, தலைக்கோலம்
மத்தம் = செருக்கு, மயக்கம், பைத்தியம், குயில், ஊமத்தை, எருமைக்கடா
மத்தளம் = கடைதல்
மத்திகை = குதிரைச் சவுக்கு
மத்தித்தல் = கடைதல், அடித்தல், தேய்த்தல்
மத்தியபானம் = கட்குடி
மத்திபம் = குறை
மத்தியமை = நடுவிரல்
மத்தியம் = இடை, கள், நடு
மந்திரித்தல் = கோபித்தல்
மத்து = ஊமத்தை, மத்து
மந்தகதி = மென்னடை
மந்தகாசம் = புன்னகை
மந்தணம் = இரகசிய ஆலோசனை, மந்திரம்
மந்தமாருதம் = சிறுதென்றல்
மந்தம் = அற்பம், அசிணம், மென்மை, கூர்மை, இன்மை, அறிவின்மை
மந்தவாரம் = சனிக்கிழமை
மந்தாகினி = தேவகங்கை, கங்கை
மந்தாணிலம் = தென்றல்
மந்தி = பெண் குரங்கு, வண்டு, சூரியன்
மத்தித்தல் = தாமதித்தல்
மந்திரம் = வீடு, ஆலோசனைச்சபை, குதிரைப்பந்தி, கோயில், வேதம், இரகசியமாகப் பேசுதல், குகை, வித்தியாதரர் உலகங்கள்
மந்திரி = குபேரன், தந்திரி, சுக்கிரன், தேர்ச்சித்துணைவன்
மந்துரை = குதிரைப்பந்தி