பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனைக்கிழத்தி

326

மன்னுலகம்


மனைக்கிழத்தி = மனைவி மனையறம் = இல்லறம் மனைவேள்வி = விருந்தோம்பல் மனோகதி = மனோவேகம் மனோகரம் = அழகு, சந்தோஷம், விரும்பப்படும் தன்மை மனோசன் = மன்மதன் மனோபலம் = மனஎண்ணம் மனோபு = மன்மதன் மனோரஞ்சிதம் = மனப்பிரியம் மனோரதம் = இச்சை மனோரம்மியம் = மனத்திருப்தி மனோராசி = மனசம்மதி மனோராச்சியம் = வீண் எண்ணம் மனோலயம் = மன ஒடுக்கம் மனோவிகாரம் = மனச் சஞ்சலம் மனோவிருத்தி = மனத்தின் வியாபாரம் மனோன்மணி = பார்வதி மன் = ஆக்கம், மிகுதி, அரசன், நிலைபேறு மன்பா = ஆசிரியப்பா மன்பதை = மக்கட்பரப்பு, படை மன்விருத்தம் = ஆசிரிய விருத்தம் மன்ற = நிச்சயமாக, மிக மன்றம் = சபை, நெடுந்தெரு, வெள்ளிடை, பொது இடம், ஊரார்கூடும் மரத்தடி, செண்டுவெளி, பசுத் தொழுவம் மன்றல் = வாசனை, திருமணம் மன்றவாணன் = சபையில் ஆடும் சிவன் மன்றாடி = சபையில் ஆடும் சிவன் மன்றாட்டம் = வேண்டுகோள் மன்று = நியாயசபை, வெளிநாடு, பசுத்தொழுவம், மன்றம், வாசனை மன்றுதல் = தண்டம் செய்தல் மன்றுபடுதல் = வெளிப்படுதல் மன்னார் = பகைவர் மன்னுதல் = நிலைபெறுதல், மிகுதல் மன்னுமான் = கடவுள் மன்னும் = மிகவும், நிலைபெறும் மன்னுயிர் = பல்லுயிர், ஆத்மா மன்னுலகம் = தேவலோகம்