பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாற்றலர்

331

மிடி


மாற்றலர் = பகைவர் மாற்றார் = பகைவர், மாற்று = எதிர், உவமை, பொன் வெள்ளியின் தரம், மாற்றல், பரிகாரம் மாளக்கவரி = சாமரை மானசி = உமாதேவி மானசிகம் = மனத்தாற் செய்யுந்தவம் மானதண்டம் = அளவைக்கோல் மானமா = கவரிமா மானம் = அளவு, நிலை தவறாது நிற்கும் பேராண்மை, நேசம், பெருமை, வலி, விமானம், வெட்கம், நன்மதிப்பு, வானம், கத்தூரி மானல் = ஒத்தல், மயக்கம், மயங்குதல் மானவர் = படைவீரர், மனிதர், பெருமையுடைய அரசர் மானார் = பகைவர், பெண்கள் மானியம் = அரசர்கள் சன்மானத்தால் விட்ட வரியிலா நிலம் மானினி = பெண் மானுதல் = ஒத்தல் மான் = ஒரு மிருகம், மகான், குதிரை, மகரராசி, மலை மான்மகன் = திருமாலின் பிள்ளையான பிரமன், மன்மதன் மான்மதம் = கஸ்துாரி மான்மறி - மான்குட்டி, பெண்மான் மான்மியம் = மகிமை மான்றல் = மயங்கல்

மி


மிகல் = பெருமை, வெற்றி மிகுதி - செருக்கு மிகுதிச்சொல் = வரம்பு மீறிய பொருள் மிகை = குற்றம், மிகுதி மிகைத்தல் = அதிகமாதல்,செருக்குதல் மிக்கோர் = அறிஞர் மிசிரம் = கலப்பு மீசை = சோறு, மேடு, மேல் மிசைதல் = உண்டல் மிச்சில் = எச்சில், ஒழி பொருள் மிச்சை = அஞ்ஞானம், தரித்திரம், பொய் மிஞிறு= வண்டு, தேனி மிடல் = வலி மிடறு = கழுத்து, தொண்டை மிடி = வறுமை, துன்பம்