பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆம்பி

33

ஆராமை


ஆம்பி = நீர் இறைக்கும் கருவி, ஒலி காளான்
ஆயக்கட்டு = பொய்ம்மொழி, மொத்தக்கணக்கு, குளவரி
ஆயதம் = நீளம்
ஆயதனம் = வீடு, கோவில், இடம்
ஆயத்தார் = திரளாகிய மகளிர்
ஆயம் = திரள், மகளிர் கூட்டம், தோழியர் கூட்டம், சூதாடு கருவி, பசுக் கூட்டம், ஆதாயம், பொருள் வருவாய், சுங்கம், பசுத்திரள், மேகம், ஒரு வகைப்பாறை, சூது
ஆயனம் = வருடம்
ஆயிடை = அவ்விடம், அவ்வேளையில்
ஆயிழை = தேர்ந்தெடுத்த நகையணிந்த பெண்
ஆயின்று = ஆயிற்று
ஆயுகாரகன் = சனி
ஆயுமறை = வைத்திய நூல்
ஆயுர்வேதம் = வைத்திய நூல்
ஆயோதநம் = போர்
ஆய் = தாய், அழகு, சிறுமை, நுட்பம், உரு வள்ளல், இடைச்சாதி
ஆய்ந்தோர் = புலவர்
ஆய்ப்பு = வருத்தம்,நடுங்குதல்
ஆய்மை = ஆராயும் தன்மை, நுண்ணிய பொருள்
ஆர = நிறைய, அனுபவிக்க
ஆரக்கம் = அகில், சந்தனம்
ஆரகன் = உருத்திரன்
ஆரணம் = வேதம்
ஆரணன் = சிவன், விஷ்ணு, பிரமன்
ஆரணவுருவார் = சிவன்
ஆரணி = பார்வதி, மாகாளி
ஆரணியம் = காடு
ஆரம் = முத்துமாலை, சந்தனக் குழம்பு, சந்தன மரம், ஆத்தி, பூமாலை, கடம்பு, நந்தவனம், தோட்டம், ஆபரணம், கண்ணிர், முத்து, பித்தளை, பறவைக் கழுத்துவரி, ஆர்க்கால்
ஆரல் = செவ்வாய், கார்த்திகை நட்சத்திரம், மதில், நெருப்பு, மதில் சுவர், மேல் மறைப்பு, மீன்வகை
ஆரவாரம் = துக்கம், பேரொலி
ஆரறிவு = நிறைந்த அறிவு
ஆராட்டு = தாலாட்டு
ஆராதித்தல் = பூசித்தல்
ஆராத்தியர் = வீர சைவர்
ஆராமம் = சோலை, மகிழ்வு
ஆராமை = பேர் அன்பு, நிரம்பாமை

5