பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வா


  
வாகடம் = வைத்திய சாஸ்திரம்
வாகம் = குதிரை, எருது
வாகனம் = சீலை, ஊர்தி
வாகினி = படை, ஒரு படைத் தொகை
வாகீசர் = திருநாவுக்கரசர்
வாகீசுவரி = சரஸ்வதி
வாகு = அழகு, ஒழுங்கு, தோள்
வாகுசன் = அரசன்
வாகுமூலம் = அக்குள், தோள் மூலம்
வாகுவலயம் = தோள் அணி
வாகை = வெற்றி, வாகை மாலை, ஒரு மரம்
வாக்கரி = வாக்கு வல்லவன்
வாக்கல் = வடிக்கப்பட்ட சோறு
வாக்கி = அறம் பொருள் இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் விரித்துக் கூறுபவன்
வாக்கியம் = வாசகம்
வாக்கியார்த்தம் = பொழிப்புரை
வாக்கியை = பார்வதி
வாக்கின்செல்வி = சரஸ்வதி
வாக்கு = திருத்தம், வடிவம், வளைவு, தன்மை , வாய், புகழ்ச் சொல், பக்கம், செல்வாக்கு
வாக்குதல் = வார்த்தல்
வாக்குதேவி = சரஸ்வதி
47
வாக்குபதி = வியாழன்
வாக்குமூலம் = சொற்கருத்து
வாங்கல் = வளைத்தல், தழுவல், இழுத்தல், கொள்ளல், நீக்கல், குறைதல், குலைதல், பின்வாங்கல், வளைவு
வாசகம் = வசனம், பேச்சு, செய்யுள், வாய்பாடு, சொற்றொடர்
வாசநெய் = புழுகு
வாசந்தி = வசந்த கால மல்லிகை, குருக்கத்தி
வாசம் = வசிக்கும் இடம், சீலை, பூமணம், இறகு, வீடு
வாசரம் = நாள்
வாசவன் = இந்திரன்
வாசவி = அர்ச்சுனன்
வாசனம் = புடைவை
வாசனை = மணம், அறிவு, பற்று
வாசா = வாக்கு
வாசாமகோசரம் = வாக்குக்கு எட்டாதது
வாசி = குதிரை, அம்பு, வட்டம், உயர்வு, தாழ்வு, நாணயம், வாயு, வட்டமாகக் கழிக்கும் பணம், குறியீடு, அஸ்வனி, வேறுபாடு, வீதம், தகுதி, நன்னிலை