பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வி


  
வி = அறிவு, நிச்சயம், பிரிவு, பறவை, விலக்கு, வேறு, காரணம், அற்பம், சுத்தி, விசேடம், ஆகாயம், காற்று, அழகு, விசை
விகங்கராஜன் = கருடன்
விகங்கம் = அம்பு, அன்னம், பறவை, மேகம், காற்றாடி
விகசிதம் = மலர்தல்
விகடம் = ஆசியம்,அழகு, பரப்பு, வேறுபாடு
விகண்டித்தல் - வேறுபடுதல், ஆட்சேபித்தல்
விகர்த்தனன் = சூரியன்
விகலம் = குறைவு, சிதைவு
விகலை = காலநுட்பம், ஒரு நாழிகை
விகற்பம் = வேறுபாடு, மயக்கத்துக்குக் காரணமான கற்பனை, பலவித கற்பனை, மனக்கோணல்
விகாசம் = பிரகாசம், மலர்ச்சி
விகாசித்தல் = மலர்தல்
விகாதம் = தடை, தீங்கு
விகாதித்தல் = விரோதித்தல்,
விகாரம் = திரிதல், வேறுபாடு, அச்சம், பொய், விளையாட்டு, ஆலயம்,
பௌத்தாலயம்
விகிதம் = செயல், விதி, சிநேகம்
விகிரம் = பறவை
விகிருதி = விகுதி, வேறுபாடு
விகிர்தம் = அச்சம், வேறுபாடு, பொய்
விகிர்தி = வேறுபாடு
விகுணம் = குணமில்லாதது
விகுணி = குணங்கெட்டது, கள்
விக்கியாதம் = பிரசித்தம்
விக்கியாபனம் = அறிவிப்பு, விண்ணப்பம், விஞ்ஞானம்
விக்கியானம் = கல்வி, விஞ்ஞானம்
விக்கியானி = கல்விமான்
விக்கிரகம் = உடல், சிலை, போர், பிரித்தல், தெய்வச்சிலை
விக்கிரகாராதனை = சிலை வணக்கம்
விக்கிரமம் = பராக்கிரமம், சாமர்த்தியம், வீரம், அடியெடுத்து வைத்தல்
விக்கிராந்தம் = மகாவீரம்
விக்கினம் = இடையூறு, தீங்கு
விங்குதல் = துளைத்தல், மிகுதல்
விசதம் = வெளிப்படை, வெண்மை, சுத்தம்