பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாலிசை

373

வான்மைந்தன்




  
வாலிசை = இளம்பெண்
வாலிது = வெளியது, தூயது, நன்று
வாலுகம் = வெண் மணல், மணல் குவியல்
வாலுவன் = சமைப்போன்
வாலேயம் = கழுதை
வாலை = ஒரு சக்தி, சிறு பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம்
வால் = ஒளி, சுத்தம், வெண்மை , பெண், பெருமை, இளமை
வாவல் = வௌவால், பாயல், தாண்டுதல், வயா
வாவி = குளம், ஆற்றோடை, நீரிடம், நடைக் கிணறு
வாவிப்புள் = அன்னம்
வாவுதல் = பாய்தல், தாண்டுதல், தாவுதல்
வாழ்க்கை = ஊர், செல்வம்
வாழ்க்கைத்துணை = மனைவி
வாழ்த்து = துதி, ஆசிர்வாதம்
வாளம் = சக்கரவாளம், வட்டம், வளைவு, வாள்
வாளரி = சிங்கம்
வாளா = சும்மா
வாளாமை = மௌனம்
வாளி = அம்பு, வட்டவாள், வீரன், வட்டமாய் ஓடல், ஒரு காதணி
வாளுழத்தி = கொற்றவை, நீர்ச்சால்
வாளுழவர் = படைவீரர்
வாவேறு = வாள்வெட்டு
வாள் = ஒளி, கொலை, கூர்மை, வாட்படை, அரிவாள்
வாறு = விதம், பேறு, வலிமை
வாற்சல்லியம் = அன்பு
வானதி = ஆகாய கங்கை
வானபத்தியம் = பூவாமல் காய்க்கும் மரம்
வானப்பிரத்தம் = மனைவியோடு காட்டில் தவம் செய்தல்
வானம் = மழை, ஆகாயம், உலர்ந்த மரம்
வானவரம்பன் = சேரன்
வானவன் = சேரன், தேவன், சூரியன்
வானாடி = தேவப்பெண்
வானி = படை, மேற்கட்டி, கூடாரம், விருதுக்கொடி, காற்றாடி, மரம், இடிக்கொடி
வானிழல் = அசரீரி
வானோர் = தேவர்
வான் = ஆகாயம், மேகம் பெருமை, மழை, வலி, இடி, சிறப்பு
வான்கண் = சூரியன்
வான்படுபுள் = வானம்பாடி
வான்மை = வெண்மை, சுத்தமுடையது
வான்மைந்தன் = வாயு