பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தம்

380

விமானம்


  
விந்தம் = விந்தியமலை, ஒரு பேரெண், செம்மணி, தாமரை, மலை, காடு
விந்தியவாசிநி = துர்க்கை, வீரலக்ஷ்மி
விந்து = நீர்த்துளி, புள்ளி, வட்டம், சுக்கிலம், சுத்தமாயை, பொட்டு
விந்தை = துர்க்கை, அழகு, கல்வி, ஆச்சரியம்
விந்நியாசம் = தாபித்தல், தொடுத்தல்
விபக்கம் = பிரதிகூலமான பக்கம்
விபச்சித்து = பண்டிதன்
விபஞ்சி = வீணை
விபத்து = வேறுபாடு, அழிவு, ஆபத்து
விபரீதம் = வேறுபாடு, பிரதிகூலம், அதிசயம்
விபலம் = பயனின்மை
விபவம் = பெருமை, வாழ்வு, செல்வம், மோட்சம்
விபாகம் = பிரிவு, பங்கு
விபாகரன் = சூரியன், தீக்கடவுள்
விபாவசு = சூரியன்
விபாவனை = ஆராய்வு
விபாவரி = இரவு, பார்வதி
விபினம் = காடு
விபு = எங்கும் வியாபகமுற்றது, சிவன், கடவுள், விஷ்ணு
விபுதர் = அறிஞர், மிகக்கற்றோர், வானோர்
விபுலம் = அகலம், பெருமை
விபுலை = பூமி
விபூதி = செல்வம், திருநீறு
விப்பிரகாரம் = அபகாரம்
விப்பிரமம் = மயக்கம்
விப்பிரயோகம் = ஒவ்வாமை, பெருமூச்சு விட்டிரங்கல், பிரிதல்
விப்பிரன் = பிராமணன், விப்ரன்
விப்பிரியம் = மீறுதல், பிரியமின்மை
விப்புருதி = ஒருவகைச் சிலந்தி
விமரிசம் = ஆராய்ச்சி, மனனம்
விமரிசனம் = ஆராய்வு
விமர்த்தனம் = அழித்தல், தேய்த்தல்
விமலம் = அழுக்கின்மை, தெளிவு
விமலன் = கடவுள்
விமலை = இலக்குமி, துர்க்கை, பார்வதி
விமானம் = அளவு, இராச மாளிகை, ஊர்தி, தேர், தேவலோகம், ஸ்தூபி, தேவர் ஊர்தி