பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விராகன்

383

விருத்தியர்


  
விராகன் = அருகன், இச்சையற்றவன்
விராட்டு = பரப்பிரமம், பிரமன்
விராத்தியன் = சாதிதருமம் விட்டவன், பிரதிலோமத் தந்தைக்கும் அனுலோமத் தாய்க்கும் பிறந்தவன்
விராமம் = மெய்யெழுத்து, முடிவு, ஓய்வு
விராய் = விறகு
விராடம் = ஒலி
விரிசிகை = முப்பத்திரண்டு கோவைமணி, மாதர் இடையணி
விரிச்சி = நன்னிமித்தம், வாய்ச்சொல்
விரிச்சிகன் = சூரியன்
விரிஞ்சன் = பிரமன்
விரிஞ்சி = பிரமன்
விரிதல் = அலர்தல், ஒளி செய்தல், விசாலித்தல், வெடித்தல்
விரித்தல் = சொல்லல், விரிவாக்குதல்
விரியல் = ஒளி, விரிந்தது, பூமாலை, பரப்பு, மலர்ச்சி
விரீகி = நெல்
விரீடம் = வெட்கம்
விருகம் = செந்நாய், மிருகம்
விருகற்பதி = வியாழன்
விருகோதரன் = வீமன்
விருக்கம் = விருட்சம்
விருசு = ஆகாயவானம், ஒரு மரம்
விருச்சிகம் = தேள்
விருச்சிகன் = சூரியன்
விருஷ்டி = மழை
விருதர் = வீரர்
விருது = வெற்றிச் சின்னம், கொடி
விருத்தகங்கை = கோதாவிரி
விருத்தகிரி = விருத்தாசலம்
விருத்தபலம் = மிளகு
விருத்தம் = பழையது, நடந்தேறினது, சரித்திரம், வெறுப்பு, மூப்பு, பழமை, பாவினத்தொன்று, வட்டம், மாறுபாடு, குற்றம், வருத்தம், இடையூறு, முரண்
விருத்தன் = முதியவன், விரோதி
விருத்தாந்தம் = கதை, வர்த்தமானம், வரலாறு
விருத்தி = அடிமை, வளர்தல், விவரம், ஒழுக்கம், இலாபம், பேருரை, வளர்ச்சி, தொழில், கூட்டம், செல்வம், தொண்டு, நிலை, செயல், இனாம்நிலம், ஆசனம்
விருத்தியர் = அடிமைகள்