பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இறைவன் இலக்கணம்

409

ஈச்சுரன் முக்கியகுணம்


இறைவன் இலக்கணம் (2) = சொரூபலக்கணம், தடத்தலக்கணம்.

இறைவன் தேவியர் (4) = உமை, விஷ்ணு, காளி, துர்க்கை.


இறைவன் தொழில் (5) = படைப்பு, காப்பு, அழிப்பு, மறைப்பு, அருளல், (ஸ்ருஷ்டி, திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம் (பஞ்சகிருத்தியம்.)



ஈசன் வில் (2) = பினாகம், மேரு.


ஈசன்வீரம் நிகழ்ந்த இடம் (8) = திருக்கண்டியூர் (பிரமன் தலையைக் கிள்ளியது), திருக்கடவூர் (யானை உதைத்தது), திருவதிகை) (திரிபுரம் எரித்தது), திருப்பறியல் (தட்சனை அழித்தது), திருவிற்குடி (சலந்தரனைக் கொன்றது), திருவழுவூர் (கயாசூரனைக் கொன்றது), திருக்குறுக்கை (காமனை எரித்தது), திருக்கோவல் (அந்தகாசூரனை அழித்தது.)


ஈச்சுரன் குணம் (3) = தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை (அல்லது) வரம்பில்ஞானம், வரம்பில் காட்சி, வரம்பில் இன்பம், வரம்பில் ஆற்றல், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, ஆயுவின்மை, இடையூறின்மை.


ஈச்வரன் சக்தி (5) = ஆதிசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி, பராசத்தி, ஞானசத்தி


ஈச்சுரன் பேதம் (9) = சிவன், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேச்சுரன், உருத்திரன், விஷ்ணு, பிரமன்.


ஈச்சுரன் முகம் (5) = ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம்.


ஈச்சுரன் முக்கியகுணம்(6) = சர்வஞ்சத்துவம், சர்வேஸ்வரத்துவம், சர்வ நிரந்திரத்துவம், சர்வாந்திரியாமித்துவம், சர்வகற்பிதத்துவம், சர்வசத்தித்துவம்.