பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈச்சுரன் மூர்த்தம்

410

உபவேதம்


ஈச்சுரன் மூர்த்தம் (25) = சந்திர சேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடணர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதாங்காரி, வீரபத்திரர், அரியர்த்தர், அர்த்த நாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசானுக்கரஹர், நீலகண்டர், சக்ரப்பிரதர், சகமுகாநுக்கிரஹர், சோமஸ்கந்தர், ஏகபாதர், சுகாதனர், தக்கிணாமூர்த்தி, இலிங்கோற்பவர்.


ஈச்சுவரன் வகை (3) = இலய சிவன், போக சிவன், அதிகார சிவன்.


ஈதி (7) = விட்டில், கிளி, நாவாய், பன்றி, தொட்டியர், கள்வர், பெரும்புயல்.



உகம் (4) = கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம்.


உடல்வகை (3) = தூலம், சூக்குமம், காரணம்.


உடல்குறை (7) = குறள் (குட்டை), செவிடு, மூங்கை (ஊமை), கூன், குருடு, மருள், உறுப்பிலாப் பிண்டம்.


உட்பகை (6) = காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம்.


உணவுவகை (5) = கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல்.


உண்டி (4) = உண்டல், தின்றல், நக்கல், பருகல்.


உண்மைப்பொருள் (3) = பதி, பசு, பாசம்.


உபசாரம் (16) = தவிசளித்தல், கைகழுவ நீர் தரல், கால் கழுவ நீர் தரல், முக்குடி நீர்தரல், நீராட்டல், ஆடைசாத்தல், முப்புரிநூல் தரல், தேய்வை பூசல், மலர் சாத்தல், மஞ்சளரிசி தூவல், நறும் புகை காட்டல், விளக்கிடல், கற்பூரமேந்தல், அமுதமேந்தல், அடைக்காய்தரல், மந்திரமலரா லருச்சித்தல்.


உபபுராண இலக்கணம் (5) = உலகத்தோற்றம், ஒடுக்கம், மனுவந்தரம், முனிவர், அரசர் மரபு, அவர்கள் சரிதம்.


உபவேதம் (4) = ஆயுர்வேதம், அர்த்தவேதம், தனுர்வேதம், காந்தர்வ வேதம்.