பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உபாங்கம்

411

ஊழ்வகை


உபாங்கம் (4) = மீமாஞ்சை, தருக்கம், புராணம், மிருதி.


உபாயம் (4) = சாம, பேத, தான, தண்டம்.


உயிர்த் தோற்றம் (4) = கருப்பை, முட்டை, நிலம், வியர்வை, (சராயுசம், அண்டசம், உற்பிசம், சுவேதசம்.)


உருத்திரர் (11) = மகாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசாநன், விசயன், வீமதேவன், பவோற்வன், காபாலி, செளமியன்.


உருத்திராக்கம் தரிக்கும் காலம் (11) = சிவமந்திர செபம், சந்தியாவந்தனம், சிவபூசை, சிவபுராண படனம், சிவத்தியானம், சிவாலய தரிசனம், திருமுறை பாராயணம் கேட்டல், தீர்த்தமாடல், விரதம் அனுட்டித்தல், சிரார்த்தம் செய்தல்.


உருத்திராக்கம் தரிக்கலாகாத காலம் (6) = சயனம், மல சலமோசனம், புணர்ச்சி, நோய், சனனாசெளசம், மரணாசெளசம்.


உரை (4) = கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை.


உரைவிலக்கணம் (5) = பதச்சேதம், பதவுரை, உதாரணம், வினா, விடை.


உலகம் (3) = பூமி, அந்தரம், சுவர்க்கம், பூலோகம், பரலோகம், அல்லது பாதாள லோகம்.


உலகம் (7) = (மேல்) பூலோகம், சுவர்லோகம், அயர்லோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம், (கீழ்) அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இராசாதலம், பாதாலம்.


உலோகம் (5) = பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், (பஞ்சலோகம்.)


உலோகம் (9) = தமனியம், இரும்பு, தாமிரம், ஈயம், வெள்ளி, பதுகம், இந்திர நாகம், கஞ்சம்.


உலோகம் (7) = செம்பொன், வெண் பொன், கரும் பொன், செம்பு, ஈயம், வெண்கலம், தரா.


உவா (2) = அமாவாசை, பெளர்ணமி.



ஊழ்வகை (3) = பிராரப்தம், ஸஞ்சிதம், ஆகாமியம்.