பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கணிகையர்

413

கிரகசமித்து


கணிகையர் (4) = தலைக்கோலரிவை, தோரியமடந்தை, தலைப்பாட்டுக் கூத்தி, இடைப்பாட்டுக் கூத்தி


கதி (4) = தேவகதி, மக்கட்கதி, விலங்கின்கதி, நரகதி.


கந்தபுராணசங்கிதை (6) = பிரம்மசங்கிதை, விட்டுணு சங்கிதை, சநற்குமார சங்கிதை, சூரசங்கிதை, சங்கர சங்கிதை, சூதசங்கிதை.


கரணம் (3) = மனம், வாக்கு, காயம், (திரிகரணம்).


கரணம் (4) = மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.


கருமபூமிக்குரியவை (6) = வரைவு, தொழில், வித்தை, வாணிபம், உழவு, சிற்பம்.


கருமேந்திரியம் (5) = வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்.


கலம்பக உறுப்பு (18) = புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம் மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல்.


கவி (4) = ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்.


கன்னிகை (5) = அகலிகை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி.


கா


காடுபடுதிரிவியம் (5) = அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி.


காவியம் (5) = சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, (ஐம்பெருங்காப்பியம்.)


கி


கிரகம் (9) = சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது, ௸ கிரகங்கட்கு முறையே கோதுமை, பச்சையரிசி, துவரை, பச்சைப்பயறு, கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, உரியவை.


கிரகசமித்து (9) = எருக்கு, முருக்கு, கருங்காலி, நாயுருவி, அரசு, அத்தி, வன்னி, அறுகு, தருப்பை.


கிரகபுட்பம் (9) = செந்தாமரை, வெள்ளாம்பல், சண்பகம், வெண்காந்தள், முல்லை, வெண்தாமரை, கருங்குவளை, மந்தாரை, செவ்வாம்பல்.