பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தசாத்திரம்

417

சிவாகமம்


  
சித்தாந்தசாத்திரம் (14) = திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம் சிவஞான சித்தியார், இருபாவிருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம்

சித்தி(8) = அணிமா (தேகம் அணுபோலாதல்), மகிமா (பெரியதாதல்). கரிமா (மலை போல் கனத்திருத்தல்), இலகிமா (கனமின்றி இருத்தல்), பிராத்தி (வேண்டுவன அடைதல்), பிராகாமியம் (பரகாயம் புகுதல்), ஈசத்துவம் (மேம்பட்டிருத்தல்) வசித்துவம் (தன்வசமாக்கல்)

சிரஞ்சீவியர் (7) = அசுவத்தாமன், மாபலி, வியாசன், அனுமான், விபீடணன், கிருபாசாரியன், பரசுராமன்

சிவசின்னம்(2) = உருத்திராக்கம், விபூதி

சிவதத்துவம்(5) = சுத்தவித்தை , ஈச்சுரம், சாதாக்கியம், சத்தி, சிவம்

சிவன்வகை(3) = அதிகார 53 சிவன், போக சிவன், இலயசிவன்

சிவாகமபாதம்(4) = சரியாபாதம் (சமயாசாரம், சமய விசேட நிருவாண ஆசாரியாபிடேக விதிகள்), கிரியா பாதம் (மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம், முதலியவைகள்), யோக பாதம் (பிராணாயாமம் முதலான யோகமுறைகள்), ஞான பாதம் (பதிபசுபாச இலக்கணம் பேசப்படும்.)

சிவகாமம்(28) = காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கிநேயம், வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திர ஞானம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேச்சுரம், கிரணம், வாதுளம், (இவை மந்திரம் எனவும், தந்திரம் எனவும், சித்தாந்தம் எனவும் பெயர்பெறும். இவ்வாகமங்கள் 2800000 கிரந்தங்களைக் கொண்டவை. இவை சிவபெருமான் வடிவமாக உள்ளவை.