பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்துப்பாட்டு

423

பிறப்பு




  
சட்டைமுனி, குதம்பைச் சித்தர், கோரக்கர், வால்மீகி, சுந்தரானந்த
தேவர், தன்வந்திரி, கமலமுனி, போகநாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டி.
 
பத்துப்பாட்டு (10) = திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு,
மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.
 
பருவகாலம்(6) = கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதிர்வேனில்.
 
பருவம்(7) = பேதை (5-7) பெதும்பை (8-11) மங்கை, (12-13) மடந்தை (14-19) அரிவை, (20-25) தெரிவை, (26-31) பேரிளம் பெண், (32-40)

பலை(3) = கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், (திரிபலை.)

பழம்(3) = வாழை, மா, பலா. (முப்பழம்)

பா

 
பா(4) = வெண்பா , ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.
 
பா(6) = வெண்பா , ஆசிரியப் பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபாடல்.
 
பாதகம்(5) = கொலை, பொய், களவு, கள்ளருந்தல், குரு நிந்தை. (பஞ்சமகாபாதகம்)

பாயிரம்(2) = பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம்.

பாவினம்(3) = தாழிசை, துறை, விருத்தம்.
 
பாஷைநிலம்(18) = திராவிடம், சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம், குசலம் (பதினெண் பாஷை நிலம்).

பி


பிணி(3) = வாதம், பித்தம், சிலேட்டுமம்.
 
பிறப்பு(7) = தேவர், (14லட்சம்) மக்கள், (9 லட்சம்) விலங்கு, (10 லட்சம்) புள்,