பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலம்

427

மூர்த்தம்




  
மலம்(3) = ஆணவம், கன்மம், மாயை.
 
மலை(8) = கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம் (அட்டகுலபர்வதம்).
 
மலைபடுதிரவியம்(5) = அகில், குங்குமம், கோட்டம், தக்கோலம், மிளகு.
 
மன்மதன் கணை(5) = வனசம், சூதம், அசோகு, முல்லை, நீலம், (பஞ்சபாணம்).
 

மா


மாதர்கள் (7) = அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி, (சப்தமாதர்).
 
மாயை(3) = சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை.
 
மார்க்கம்(4) = சன்மார்க்கம் (ஞானவழி), தாசமார்க்கம் (தொண்டுவழி) சகமார்க்கம் (நட்புவழி), சத்புத்ர மார்க்கம் (புத்திரர்வழி).

மு

 
முக்கனி(3) = வாழை, மா, பலா, (முப்பழம்).
 
முத்துப்பிறக்கும் இடம்(20) = சந்திரன், மேகம், சங்கு, சிப்பி, மீன், நத்தை, முதலை, உடும்பு, தாமரை, வாழை, கமுகு, கரும்பு, செந்நெல், மூங்கில், யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, பசுவின்பல், நாகம், கொக்கு, மாதர் கழுத்து.
 
முப்பொருள்(3) = பதி, பசு, பாசம்.
 
மும்மை (3) = இம்மை , மறுமை, உம்மை.
 
முரசு(3) = வீரமுரசு, கொடைமுரசு, மணமுரசு, (மும்முரசு).
 
முனிவர்(7) = அத்திரி, ஆங்கீரசன், கௌதமன், சமதக்கினி, பரத்துவாசன், வசிட்டன், விசுவாமித்திரன் (சப்தமுனிவர்) (அல்லது) அகத்தியன், ஆங்கீரசன் கௌதமன், காசிபன், புலத்தியன், மார்க்கண்டன், வசிட்டன்.

மூ


மூர்த்தம்(8) = பூமி, நீர், தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா (அட்ட மூர்த்தம்)