பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருமகிழ்ச்சிமாலை

444

மும்மணிக்கோவை


லான மற்றும் பல அமைப்புக்கள் அமைய இலம்பகம் பரிச்சேதம், சருக்கம் என்னும் பிரிவுடன் ஒன்பான் சுவையும் பொருந்தப் பாடப்படுவது. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருளை நிச்சயமாகப் பயப்பதாய் அமைதல் வேண்டும். (உ-ம்) சீவக சிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம்.

பெருமகிழ்ச்சிமாலை = தலைமகனுடைய அழகு, குணம், ஆக்கம், சிறப்பு இவற்றைக் கூறிப்பாடப் படுவது.

பெருமங்கலம் = தினமும் மேற்கோள்ளும் சிறையீடு செய்தல், நீக்கல், பிறந்த நாள் சிறப்பு முதலானவற்றைக் கூறல்.

போ

போர்க்கெழுவஞ்சி = பகைவர் மேல் செல்லும் மன்னன் வஞ்சிப்பூவைச் சூடிப் புறப்படுகையில், படை எழுச்சி செல்லும் சிறப்பை ஆசிரியப்பாவால் பாடுவது.

மங்கலவள்ளை = உயர் குலத்துப் பிறந்த மாதினை ஒன்பது வெண்பாவாலேனும், ஒன்பது வகுப்பாலேனும் புகழ்ந்து பாடுவது.

மணிமாலை = எந்தப் பொருளைப் பற்றியாவது இருபது வெண்பாக்களைக் கொண்டும் , நாற்பது கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டும் பாடப்பட்டு வருவது.

போ

முது காஞ்சி = இளமை கழிந்து அறிவில் மிக்க பெரியொர்கள் இளமை கழியாது அறிவின்றி இருக்கும் மக்கட்கு நல்லுபதேசங்கள் கூறும் முறையில் பாடப்படுவது . (உ-ம்) முது மொழிக்காஞ்சி .

மும்மணிமாலை = மூன்று மணிகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து மாலை கோப்பது போல, வெண்பா, கட்டளைக்கலித்துறை, அகவல் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமைய, அந்தாதித் தொடையில் முப்பது பாடல்களால் பாடப்படுவது.

மும்மணிக்கோவை = மூன்று மணிகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றன்பின் ஒன்றாக வைத்துக் கோத்துக் கோவைப்படுத்துவது போல ஆசிரியப்