பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இன்னா நாற்பது

461

ஈட்டி எழுபது


இன்னா நாற்பது = இது ஒரு நீதி நூல். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கபிலர் இயற்றியது. இந்த இந்தச் செயல்கள் இன்னா தருவன என்று கூறும் முறையில் அமைந்த வெண்பாவைப் பெற்றது. கடவுள் வாழத்துப் பாடலும் சேர்ந்து 41 இன்னிசை வெண்பாக்கள் இதில் காணப்படும். கடைச்சங்க காலம்.

இன்னிலை = இந்நூலைச் சங்க காலப் பொய்கையார் என்ற பெயருடையார் பாடிய நூல் என்பர். இஃது அறத்துப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டிலக்கப்பால் என நான்கு பிரிவுடையது. இந் நூலாசிரியர் சைவர். இந்நூலைத் தொகுத்தவர் மதுரை ஆசிரியர் பூதனார் என்பவர். இந்நூலில் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிச் சேர்த்த கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உண்டு. அறத்துப்பாலில் பத்தும், பொருட்பாலில் ஒன்பதும், இன்பத்துப்பாலில் பன்னிரண்டும் வீட்டிலக்கப்பாலில் பதினான்கும் ஆக, 45 வெண்பாக்கள் உண்டு. வீட்டிலக்கணப் பாலில் இல்லற இயல், துறவற இயல் என்ற இரண்டு பிரிவு உண்டு. இது நீதி நூல் வகையைச் சார்ந்தது. கடைச்சங்க காலத்தது.


ஈசுரகீதை = இது ஒரு மொழிபெயர்ப்பு நூல். இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர் தத்துவராயர் என்னும் சைவ முனிவர். இது பரசிவ மூர்த்தி சனத்குமாரர் முதலிய முனிவர்கட்கு உபதேசம் செய்யப்பட்டது. இதன் கண், சாங்கிய யோகம், பரபத்தி, விசுவ ரூபம், சிவசத்தி, தத்துவநிசம், விபூதி, பிரபஞ்சம், தத்துவ தரிசனம், யோகம் ஆகிய இவற்றைப் பற்றிய அரிய செய்திகள் காணப்படும். காலம் 15-ஆம் நூற்றாண்டு.

ஈட்டி எழுபது = இந்நூல் ஒட்டக்கூத்தரால் பாடப் பட்டது. இந்நூல் செங்குந்த மரபின் பெருமையை உரைப்பது. எழுபது வெண்பாவால் அமைந்தது. ஒட்டக்கூத்தர் இந்நூலைப் பாடி