பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கைலாசநாதர் சதகம்

481

கொடிக்கவி


கைலாசநாதர் சதகம் 481

கைலாசநாதர் சதகம் = நூறு பாடல்களையுடைய ஒரு நீதி நால். ஆசிரியர் சிதம்பரவாணர் என்பவர். கி.பி. 19ஆம் நூற்றாண்டு.

கைலைக் கலம்பகம் = குமரகுருபர சுவாமிகளால் எழுதப்பட்ட நூல். காலம் கி. பி. 18 ஆம் நூற்றாண்டு.

கைவல்லிய நவநீதம் = இது ஒரு வேதந்த நூல். இதனை இயற்றியவர் தாண்டவராய சுவாமிகள். காலம் கி. பி. 17 ஆம் நூற்றாண்டு. உலகில் உள்ள பொருள்கள் நிலையுள்ளவை அல்ல என்பதை வெண்ணெய் போல எளிதாகப் புரியும் வகையில் எடுத்துக் கூறிப் பரம்பொருள் ஒன்றே நிலையுள்ளது என்ற கருத்தை நிலைநாட்டிச் செல்வதால் இது இப்பெயர்பெற்றது.

கொ

கொங்குமண்டல சதகம் = இது விசயமங்கலம் கார்மேகக் கவிஞர் என்பவரால் பாடப்பட்டது. இச்சதகத்தால் கொங்கு நாட்டிற்குத் தொடர்புடைய புலவர்களைப் பற்றிய 61 குறிப்பு முதலானவற்றை அறியலாம். காலம் அறிதற்கு இல்லை

கொங்குவேள் மாக்கதை = இந்நூல் கொங்கு நாட்டில் வாழ்ந்த வேளாளர் தலைவருள் ஒருவரால் இயற்றப்பட்ட நூல். இதனைப் பெருங்கதை என்றும் கூறுவர். இதன் முதன் நூல் குணாட்டியர் என்பவரால் பைசாச மொழியில் இயற்றப்படபட்டது. கோசம்பி நகரத்தரசன் உதயணன் என்பான் வரலாற்றைக் கூறுவது. காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டு. இந்நூல் ஆசிரியர் பெயர் தெரிந்திலது. கொங்குவேள் என்பது அவரது பெயராக இருக்கலாமோ என்று யூகிக்கப்படுகிறது. இவர் ஊர் விசயமங்கை.

கொடிக்கவி = இது சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் பதினான்கனுள் ஒன்று. கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியரால் பாடப்பட்டது. சிதம்பரப் பெருவிழாவில் துஜஸ்தம்பத்தில் கொடியேற இந்நூலைப் பாடினர். காலம் கி. பி. 14- ஆம் நூற்றாண்டு.