பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமானுஜன்

47

இருபுறவாழ்த்து


இராமானுஜன் = இலக்குமணன், இராமானுசாசாரியார்
இராமேசம் = ராமேஸ்வரம்
இராயசம் = எழுதும் தொழில்
இராயன் = அரசன், விளக்கு
இராவணம் = அழுதல், ஆரவாரித்தல்,
இராவணி = இந்திரஜித்து
இராவுத்தன் = குதிரைச் சேவகன்
இரிணம் = உழமண் பூமி
இரிதல் = ஒடல், சாய்தல், கெடுதல், வடிதல், அஞ்சுதல், விலகுதல்
இரியல் = பறத்தல், நல்லாடை, கெடுதல், அழுகை
இரீஇ = இருந்து, இருத்தி
இரீதி = ஒழுங்கு
இரு = பெரிய, இரண்டு
இருகால் = இரு முறை, இரு பாதம்
இருகை = இரண்டு பக்கம்
இருக்கு = மந்திரம், ரிக்வேதம்
இருக்கை = ஆசனம், இருத்தல், வீடு, கோவில், ஊர்
இருசி = ஒரு பெண் பிசாசு, இருஷி, முனிவன், பூப்பு இல்லாத பெண்
இருசு = செம்மை, நேர்மை, மூங்கில்
இருசுடர் = சந்திர சூரியர்
இருஞ்சிறை = மதில், காவல்
இருஷிகேசன் = விஷ்ணு
இருடி = ஆந்தை, முனிவன்
இருட்சி = இருள், மயக்கம்
இருட்பகைவன் = சூரியன்
இருணம் = கடன், உவர்நிலம்
இருண்டி = சண்பகம்
இருண்மலம் = ஆணவமலம்
இருது = இரண்டு மாதம் கொண்ட பருவம், தக்க காலம், மகளிர்பூப்பு
இருத்தி = சித்தி, வளர்ச்சி, இருப்பாயாக
இருத்துவிக்கு = யாகப் புரோகிதன்
இருநா = உடும்பு, பாம்பு
இருநிதி = சங்கநிதி, பதுமநிதி
இருநிதிக்கிழவன் = குபேரன்
இருந்தேத்துவார் = மாகதர்
இருந்தை = கரி
இருபால் = இம்மை, மறுமை, இருமை
இருபான் = இருபது
இருபிறப்பாளர் = பார்ப்பனர்
இருபுறவாழ்த்து = வாழ்த்துப்போன்ற வசை