பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசிரியம்

511

திருவிசைப்பா


யானம் உண்டு. மறைமலை அடிகள் முதல் நான்கு பாடல்களுக்கு எழுதிய உரையுண்டு. இவைகளே அன்றி, மற்றும் சில உரைகளும் வெளிவந்துள்ளன. இதன் காலம் கி.பி.4 ஆம் நூற்றாண்டு.

திருவாசிரியம் = நம்மாழ்வார் பாடிய நாலாயிரப் பிரபந்தத்துள் உள்ளது. காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு. திருமாலின் பெருமைகளை ஆசிரியப்பாவால் உணர்த்துவது.

திருவாதவூரடிகள் புராணம் = மாணிக்கவாசகரது வரலாற்றை அறிவிக்கும் நூல் என்பதால் இதில் பதி பசு பாசங்களின் விளக்கமும், குதிரைகளின் இலட்சணமும் மற்றும் பல அரிய குறிப்புக்களும் அழகுறக் கூறப்பட்டுள்ளன. படிக்கப் படிக்கச் சுவை அமைந்த நூல். இதற்குக் குமாரதேவர் என்பர் உரை எழுதியுள்ளார். புராணத்தின் காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

திருவாய்மொழி = வைணவ சமயத்திற்குரிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ளது. இது வேதத்தின் சாரம் என்று கூறப்படுவது. அகப்பொருள் கருத்துக்களை மிகுதியாகக் கொண்டு பாடப்பட்டது. இதனைப் பாடியவர் நம்மாழ்வார். இதற்கு நம்பிள்ளை நஞ்சீயர், திருக்குருகைப்பிரான் பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை முதலானவர் உரைகள் உண்டு. இந்நூலின் காலம் கி. பி. 8 ஆம் நூற்றாண்டு. திருமாலின் மீது பாடப்பட்ட தோத்திர நூல்.

திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் = திருவாடுதுறை குருமகா சந்நிதானமாக விளங்கிய பரமாசாரிய சுவாமிகளான அம்பலவாண தேசிகர் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ். இதனைப் பாடியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். காலம் கி.பி.19ஆம் நூற்றாண்டு.

திருவிசைப்பா = சைவத் திருமுறை 12-னுள் 3-ஆம் திருமுறையாக அமைந்த தோத்திர நூல். இந்நூல் கண்டராதித்தர், கருவூர்த்தேவர், திருவாலியமுதனார், திருமாளிகைத்