பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தில்லைக் கலம்பகம்

514

தேம்பாவணி




 
தில்லைக் கலம்பகம் = சிதம்பரத்தின் மீது பிறவியிலேயே குருடும், முடமுமாய்ப் பிறந்து, இளஞ்சூரியர், முதுசூரியர் பெயருடன் திகழ்ந்த இரட்டைப் புலவர்களால் பாடப்பட்டது. இதன் காலம் 15 ஆம் நூற்றாண்டு. இது தோத்திர நூல். இலக்கிய நயமுடையது.

திவாகரம் = இது ஒரு நிகண்டு நூல். தமிழ் மொழியின் பொருளை நன்கு அறிதற்குத் துணை செய்யும் நூல், இக்காலத்தில் அகராதி பயன்படுவது போல், முற்காலத்தில் இத்தகைய நூற்களே சொற்பொருள் அறியத் துணை செய்தன. திவாகரம் என்னும் நூல் சேந்தன் என்னும் அரசனது வேண்டுகோளால் திவாகர முனிவரால் பாடப்பட்டது. அதனால் இது சேந்தன் திவாகரம் என்றும் கூறப்படும். காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு.


து


துகளறு போதக்கட்டளை = இது சைவசித்தாந்த கருத்தைக் கூறும் நூல். இதில் பதி, பசு, பாசங்களின் இயல்புகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இதனைச் சீர்காழி சிற்றம்பல நாடிகளின் சீடர்களில் ஒருவர் செய்துள்ளார். இது உரைநடையால் ஆனது. இந்நூலாசிரியர் தமது அஞ்ஞானத்தைத் தம் ஞானாசிரியர் போக்கி அருளிய திறத்தைச் சிறப்பாக எடுத்து மொழிந்துள்ளார். காலம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு.
 
துகளறு போதம் = இது செய்யுள் வடிவான நூல். சைவசித்தாந்த கருத்துக்களைச் செவ்வையாக எடுத்துக் கூறும் நூல். பதி, பசு, பாச இயல்புகளை இதன் மூலம் அறியலாம். இதன் ஆசிரியர் சிற்றம்பல நாடிகள். காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு.

தே

 
தேம்பாவணி = தே+பா+அணி என்னும் சொற்கள் இணைந்து தேம்பாவணி என்று ஆயது. இனிமையான பாடல்களை அழகுறக் கொண்ட நூல் என்பதே இத்தொடரின் பொருள். ஏசுப்பெருமானின் வரலாற்றைத் தமிழில் எடுத்து