பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதம் 529 பாவலர் விருந்து



புலவர்கள், பாண்டிய நாட்டு சரித்திரக் குறிப்புகள் அறியப்படும். காலம் அறிதற்கு இல்லை. ஆசிரியர் ஐயம்பெருமாள்.

பாரதம் = இப்பெயரால் இரு புலவர்கள் பாடிய நூற்கள் உண்டு. ஒன்று வில்லிபுத்தூராரால் பாடப்பட்டது. அது வில்லிபாரதம் எனப்படும். வில்லியார் தம்மை ஆதரித்த வக்கபாகை வரபதி ஆட்கொண்டானது வேண்டுகோளுக்கிணங்கி இந்நூலைப் பாடினார். அவனது சிறப்பையும் இந்நூாலில் தக்க இடத்தில் வைத்துப் பாடியுள்ளார். காலம் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு. நல்லாப்பிள்ளை என்பவரும் பாரதம் பாடியுள்ளார். அது நல்லாப் பிள்ளை பாரதம் என்று கூறப்படும். இதன் காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு. இவ்விரு நூல்களும் பரத வம்சத்தவர்களான கெளரவ பாண்டவர்களின் வரலாற்றைக் கூறுவனவாகும்.

பாரத வெண்பா = பாரதக் கதையை வெண்பாவால் பாடிய நூலே பாரத வெண்பாவாகும். இம்முறையில் பாடியவர் பெருங்தேவனார் என்பவர். காலம் 9ஆம் நூற்றாண்டு.

பாரிகாதை = தமிழ் நாட்டுப் பண்டைக் காலக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரி என்பவனது வரலாற்றை வெண்பாவால் கூறும் நூல் இது. இதனைப் பாடியவர் திரு.ரா.ராகவய்யங்கார் என்பவர். இதன் பொருட்டு ராஜா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் பொன் முடிப்பு ஒன்றையும் ஆசிரியர்க்குப் பரிசு அளித்துள்ளார்.

பாவலர் விருந்து = பல்வகை பொருள்களின் மீது சிறந்த கருத்துக்கள் வெளிவரும் முறையில் அகவல் பாவால் பாடப்பட்ட நூலாகும். இது ஆங்கிலத்தில் உள்ள சானட் என்னும் முறையில் அமைதல் வேண்டும் என்ற எண்ணத்துடன் பாடப்பட்டது. கலங்கரை விளக்கம், மாணாக்கன் முதலான தலைப்புக்களுடன் அமைந்த பாடல்களைக் காண்க. இதன் பெருமை அறிந்த டாக்டர் போப்