பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழமொழி528பாண்டிமண்டல சதகம்


 திருப்பரங்குன்றம், திருமாலிருஞ் சோலை, வைகை நதி, மதுரையம்பதி ஆகிய இவற்றின் இயற்கை வளன் முதலியவற்றை நன்கு அறியலாம். திருமாலின் பெருமைகளையும், திருமுருகன் மாண்புகளையும் உணரலாம். அகப்பொருட் சிறப்பு அதிகமாக இதில் பேசப்பட்டுள்ளது. இதற்குப் பரிமேலழகர் எழுதிய உரை உண்டு.

பழமொழி = இது சங்கம் மருவிய பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்று. இதில் நானூறு வெண்பாக்கள் உண்டு. அதனால் இது பழமொழி நானூறு என்ற பெயரையும் பெற்றது. ஒவ்வொரு வெண்பாவிலும் நல்ல பழமொழி ஒன்று உண்டு. அதனால் இந்நூால் பழமொழி என்றே பெயர் பெற்றது. இதனைப் பாடியவர் முன்றுறை அரையனார். காலம் கடைச்சங்க காலம்.

பன்னிரு படலம் = இது அகத்திய முனிவருடைய மாணவர்கள் பன்னிருவர் புறப் பொருளைப் பற்றிப் பாடிய பாடல்களைக் கொண்ட நூல் என்பர் ஆகவே இது புறப்பொ ருள் இலக்கணம் கூறும் நூல். காலம் கூறுதற் கில்லை.

பா

பாகவத புராணம் = கிருஷ்ணனது வரலாறு அறிதற்குப் பெருந்துணை செய்யும் நூல். இதுவேயன்றிப் பழைய உலகத் தோற்றம், ஒடுக்கம் முதலானவற்றை உணர்த்த வல்ல நூாலும் ஆகும். அதன் ஆசிரியர் அரியப்பப் புலவர். காலம் அறிதற்கு இல்லை.

பாசவதைப் பரணி = இது ஒரு வேதாந்த நூல். தமிழில் வெற்றி கண்ட வீரன் மீது பாடப்படும் பரணி போல, சீவான்மாவைப் பந்தித்து நிற்கும் பாசத்தை அழித்து வெற்றி காணும் வகைகளை உணர்த்தும் நூல். இதன் ஆசிரியர் தத்துவராயர். காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.

பாண்டிமண்டல சதகம் = பாண்டிய நாட்டின் பெயரால் நூறு பாடல்களில் பாடப்பட்ட நூல். இதனால் பாண்டிய நாட்டுப்