பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இழுதை

52

இறக்கம்


இழுதை = பேய், அறிவிலான், பொய்
இழுமெனல் = இனிமை
இழுவை = வடம்
இழை = நகை, ஒருவகை மாலை, நூல் இழை
இழைதல் = பெருமூச்சு விடுதல், பொருந்துதல், குழைதல், நெகிழ்தல், கூடுதல்
இழைத்தல் = கலப்பித்தல், சபதம் கூறல், பூசுதல், அழுத்துதல், நூற்றல், வரைதல், நுண்ணியதாக ஆராய்தல், கூறுதல்
இளகுதல் = தழைத்தல், நெகிழ்தல், அசைதல், களைத்தல்
இளக்கம் = மென்மை, தளர்ச்சி, இளக்காரம்
இளங்கால் = வெற்றிலை இளங்கொடி, இளமைப் பருவம், தென்றல்
இளங்கிளை = தம்பி, தங்கை, பிள்ளை
இளங்கோ = வைசியன், அரசிளங்குமரன், இளங்கோ அடிகள்
இளநலம் = இளமை இன்பம்
இளந்தலை = இளமை, எளிமை
இளந்தோயல் = உறைந்து வரும் தயிர்
இளமரக்கா = இளஞ்சோலை, வயல் சூழ்ந்த சோலை
இளவல் = தம்பி
இளவேனில் = சித்திரை வைகாசி மாதப் பருவம், வசந்த காலம்
இளி = அவமதிச் சிரிப்பு, இழிவு, இசை, யாழ் நரம்புகளில் ஒன்று, குற்றம், ஒரு பண்
இளிதல் = இணங்குதல், உரித்தல், இகழப்பட்டு எளியனாதல்
இளிவரல் = இழிதல்
இளிவரவு = இகழ்ச்சி
இளிவு = அருவருப்பு
இளை = இளமை, காவற்காடு, காவல், பூமி, மேகம்
இளைத்தல் = தோற்றுப்போதல்
இளைபடுதல் = வலையில் அகப்படுதல்
இளையபிள்ளையார் = முருகன்
இளையர் = இளைஞர், சேவகர், வேலைக்காரர்
இளையவள் = இலக்குமி, தங்கை
இறக்கம் = மரணம், சரிவு