பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்லாள்

51

இழுது


இல்லாள் = மனைவி
இல்லி = துவாரம், வால் மிளகு
இல்லிறத்தல் = பிறன் மனையாளிடத்தில் நெறி கடந்து செல்லுதல்
இல்லொடுவரவு = குடிப்பிறப்பு
இல்லொழுக்கம் = இல்லறம்
இல்லோன் = தரித்திரன்
இவக்காண் = இங்கே
இவணர் = இவ்வுலகத்தார்
இவண் = இவ்விடம்
இவரித்தல் = எதிர்த்தல்
இவர்தல் = எழும்புதல், ஏறுதல், செல்லுதல், நடத்தல், உலாவுதல், கலத்தல், விரும்புதல், அடைதல், உயர்த்தல், பரத்தல், பாய்தல், பொருந்துதல், மேற்கொள்ளுதல், ஒத்தல்
இவர்வு = ஏறுதல்
இவவு = இழிவு
இவறல் = ஆசை, மறதி, வேண்டும்போது பொருளைக் கொடாமை
இவறன்மை = அசட்டை, ஆசை, உலோபகுணம்
இவறியார் = கைவிடாதவர்
இவறுதல் = ஆசையுறுதல்
இவுளி = குதிரை, மாமரம்
இவுளிமறவன் = குதிரை, வீரன்
இவ் = இவை
இழவு = சாவு, கேடு
இழிசனர் = கீழ் மக்கள்
இழிதகவு = இழிவு
இழிதல் = இறங்குதல், தாழ்தல், விழுதல், இழிவுபடுதல்
இழிதிணை = அஃறிணை
இழிபு = கீழ்மை, பள்ளம், தாழ்மை, சிறுமை, குற்றம், தீட்டு
இழுகுதல் = பூசுதல், வீசுதல், பரத்தல், படிதல் , தாமதித்தல்
இழுக்கம் = ஈனம், ஒழுக்கமின்மை, தவறு, தளர்வு
இழுக்கல் = வழுக்கு நிலம், தளர்வு
இழுக்காமை = மறவாமை
இழுக்காறு = துன்மார்க்கம்
இழுக்கியான் = மறந்திருந்தவன்
இழுக்கு = ஈனம், கீழ்மை, தவறு, நிந்தை, வழுக்கு நிலம், பொல்லாங்கு, அவலம், குற்றம், வழு, தாழ்வு, மறதி
இழுங்கு = நீங்குகை
இழுது = நெய், கள், குழம்பு, குழை, சேறு, தேன்