பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலலிதை

50

இல்லாமை


இலலிதை = பார்வதி
இலவணம் = உப்பு
இலவந்திகை = எந்திரவரவி, நீர்வாவியைச் சூழ்ந்த வசந்த சோலை
இலவம் = அற்பம்
இலவலேசம் = மிகச் சிறிது
இலாகவம் = எளிமை, சாமர்த்தியம்
இலாங்கலம் = கலப்பை
இலாங்கலி = தென்னை மரம், பலராமன், செங்காந்தள், கலப்பை
இலாங்கூலம் = வால்
இலாஞ்சனை = அடையாளம், முத்திரை, மதிப்பு
இலாட்சை = செல்வாக்கு
இலாலனை = கொஞ்சுதல், சீராட்டுதல், தாலாட்டுதல்
இலாலி = மங்கலப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு
இலாவண்ணியம் = பேரழகு
இலிகிதம் = கடிதம், எழுத்து
இலிங்கம் = குறி, அடையாளம், சிவன் உரு
இலிங்கி = தவவேடம் பூண்டவன்
இலிபி = எழுத்து, விதி
இலிர்த்தல் = சிலிர்த்தல், தளிர்த்தல்
இலிற்றுதல் = சொரிதல், சுரத்தல், துளித்தல்
இலீலை = கதை, சரசம், விளையாட்டு
இலுதை = அணில்
இலேகநி = எழுத்தாணி, எழுது கோல்
இலேகர் = தேவர்
இலேககன் = எழுதுவோன், சித்திரக்காரன்
இலேபனம் = எழும்பல்
இலைக்குரம்பை = பர்ணசாலை
இலையமுது = வெற்றிலை
இலெளகிகம் = உலகசம்பந்தமானது, சம்பிரதாயம், வழக்கம்
இல் = மனைவி, இல், இராசி, இடம், மனை, வாழ்க்கை, வீடு, இல்லாமை, சாவு, தேற்றாமரம், குடி
இல்லக்கிழத்தி = மனைவி
இல்லடை = ஒட்டடை, அடைமானப் பொருள்
இல்லல் = நடக்கை
இல்லறம் = மனையறம்
இல்லாச்சிரமம் = இல்லற தருமம்
இல்லாண்மை = இல்லத்தினை ஆளும் தன்மை
இல்லாமை = வறுமை இன்மை