பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலகுசம்

49

இலவிதம்


இலகுசம் = ஈரப்பலா
இலகுதல் = விளங்குதல்,ஒளிவிடுதல்
இலக்கணம் = இயல்பு, அடையாளம், சிறப்பு, இலக்கண நூல், ஒழுங்கு, அழகு
இலக்ணை = உரிய பொருளை விட்டு அப்பொருளின் தொடர்புடையதை அறிவிப்பது
இலக்கம் = எண், இலட்சம், குறிப்பொருள், ஒளி
இலக்கல் = விளக்குதல்
இலக்கியம் = காப்பியம், உதாரணம், குறி, இலக்கணம் அமைந்த நூல்
இலக்கினம் = இராசிகளின் தோற்றம், முகூர்த்தம்
இலக்கு = எதிர், குறி, சமயம்
இலக்குமி = அழகு, செல்வம், முத்து, அதிர்ஷ்டம, ஸ்ரீதேவி
இலங்கணம் = பட்டினி இருத்தல்
இலங்கல் = ஒளிவிடுதல்
இலங்கித்தல் = குதித்தல், கடத்தல்
இலங்கிழை = பெண்
இலச்சினை = குறி, முத்திரை, முத்திரை மோதிரம்
இலஞ்சி = எரி, மடு, மகிழமரம், மதில், கொப்பூழ், குளம், குணம், சாரைப்பாம்பு
இலட்சணம் = அழகு, பார்வை
இலட்சியம் = மதிப்பு, குறி
இலண்டன் = முருடன்
இலதை = கொடி, இலந்தை
இலந்தை = குளம், ஒருவகை மரம்
இலபித்தல் = கிட்டுதல்
இலம் = வறுமை
இலம்பகம் = அத்தியாயம், நெற்றியில் அணியும் நகை, மாலை
இலம்படுதல் = தரித்திரம் அடைதல்
இலம்பம் = தொங்கல், மாலை
இலம்பாடு = வறுமை
இலம்பை = வறுமை, துன்பம்
இலயகாலம் = அழியும் காலம்
இலயஸ்தானம் = ஒடுங்கும் இடம்
இலயம் = கூத்து, அழிவு, அடங்குதல்
இலாடம் = நெற்றி
இலாடலிபி = தலை எழுத்து
இலலிதம் = அழகு