பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுக நாவலர்

562

இடைக்காடர்




  
வதில் தலைசிறந்தவர். சிறந்த சொற்பொழிவும் செய்யக் கூடியவர். இவரது ஆசிரியர் இருபாலைச் சேனாதிராய முதலியார். நாவலர் என்றே சிறப்பாக அழைக்கப்படுபவர். இவர் இளைஞர்கட்குரியனவாகிய பாலபாடங்களை எழுதியவர். பெரியபுராண வசனமும், திருவிளையாடற்புராண வசனமும் இவரால் எழுதப்பட்டவை. இலக்கணச் சுருக்கமும் எழுதியுள்ளார். சமய சம்பந்தமாகச் சைவ வினா விடை நூலையும் எழுதியுள்ளார். கோயில் புராணம், நன்னூல் முதலியவற்றிற்கு உரையும் எழுதியுள்ளார். தேவகோட்டைத் தலபுராணத்தையும் எழுதியுள்ளார். இவர் பல நூல்களையும் பதிப்பித்தவர். அவை பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை, (இப்பதிப்பின் வாயிலாகத்தான் பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்" என்பது குரவர்த்தப்பிய கொடுமையோர்க்கும் " என்னும் தொடர் அறிய வந்தது) திருக்கோவையார் உரை, இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம், நன்னூல் விருத்தி, சூடாமணி நிகண்டு, சிவஞான போதம் முதலியன. காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு.



இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் = இவர் கடைச்சங்க காலத்தவர். பத்துப்பாட்டில் உள்ள சிறுபாணாற்றுப்படையினை எழுதியவர்.

இடைக்காடர் = சங்க காலத்தவர். இவர் இடையர்களைப் பற்றிப் பெரிதும் பாடியிருப்பதால் இப்பெயர் பெற்றனரோ அன்றி, மலையாளப் பிரதேசத்தைச் சார்ந்த இடைக்காடு என்னும் ஊரினராக இருந்த காரணத்தால் இப்பெயர் பெற்றனரோ என்பதைத் திட்டமாகத் தெரிந்துகொள்ள இயலவில்லை. இவர் பாடினவாக அகத்தில் ஆறு, புறத்தில் ஒன்று, குறுந்தொகையில் ஒன்று, திருவள்ளுவமாலையில் ஒன்று, நற்றிணையில் மூன்று, ஆக பன்னிரண்டு பாடல்கள் உள்ளன. இவைகளே அன்றி ஊசிமுறி, அறுபது வருட வெண்பா, மூவடி முப்பது என்னும்