பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இறைகூடல்

54

இனைதல்


இறைகூடல் = அரசாளுதல்
இறைகூர்தல் = தங்குதல்
இறைகொள்ளுதல் = தங்குதல்
இறைச்சி = கோபம், புலால், கருப்பொருள்
இறைச்சிப்பொருள் = குறிப்புப் பொருள்
இறைஞானம் = சிவஞானம்
இறைஞ்சலர் = பகைவர்
இறைஞ்சி = மரவுரி
இறைஞ்சுதல் = வணங்குதல், கவிழ்தல், வளைதல்
இறைதல் = வணங்குதல், சிந்துதல்,
இறைபுரிதல் = அரசாட்சி செய்தல்
இறைமகன் = விநாயகன், அரசன்
இறைமாட்சி = அரசனது நற்குண நற்செய்கை, அரசியல்
இறைமை = தலைமை, இராச்சிய முறை, தெய்வத் தன்மை
இறைமொழி = மறுமொழி
இறையிலி = சர்வ மான்யம், வரி செலுத்தல் இல்லாத நிலம்
இறையோன் = குரு, கடவுள், அரசன், தலைவன்
இறைவரை = க்ஷணப் பொழுது
இறைவி = தலைவி, உமை
இறைவை = இறை கூடை, ஏணி
இற்கடை = வீட்டுவாயில்
இற்செறித்தல் = கன்னியை வீட்டில் இருக்கச் செய்து காத்தல்
இற்பரத்தை = காமக்கிழத்தி
இற்பிறப்பு = உயர்குடிப் பிறப்பு
இற்புலி = பூனை
இற்றி = ஊன், ஒரு மரம்
இற்று = இத்தன்மைத்து, நைந்து
இற்றும் = மேலும்
இற்றை = இன்று
இனம் = வகை, குலம், கூட்டம், தொகுதி, நரை, நண்பர், சுற்றம, ஒப்பு, அமைச்சர்
இனன் = சூரியன், அரசன், சந்திரன்
இனிது = நன்மையானது, இன்பம் தருவது, நன்றாக
இனிப்பு = மகிழ்ச்சி, தித்திப்பு
இனியர் = மகளிர், இனிமை தருபவர்
இனை = துன்பம், இன்ன
இனாதரல் = மெலிதல்
இனைதல் = வருந்துதல், இரங்குதல், அஞ்சுதல்