பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இனைத்தல்

55

இஃது


இனைத்தல் = ஒலித்தல், வருத்தல், கெடுத்தல்
இனைத்து = இத்தன்மைத்து, இவ்வளவு
இனைய = இதுபோல்வன, இத்தன்மைய
இனைவரல் = வருந்துதல்
இனைவு = வருத்தம், இரக்கம்
இன் = இனிய, இனிமை
இன்கண் = இன்பம், தாட்சண்யம்
இன்சபம் = ராஜ சபை
இன்பம் = காமம், கலியாணம், மகிழ்ச்சி
இன்பன் = கணவன்
இன்பு = இன்பம்
இன்புறவு = மகிழ்கை
இன்மை = வறுமை இல்லாமை
இன்றி = இல்லாத
இன்றியமையாமை = அவசியம், இல்லாமல் முடியாமை
இன்ன = இத்தன்மைய
இன்னணம் = இவ்விதம்
இன்னது = இது, இத்தன்மையது
இன்னம் = இத்தன்மையுடையோம், இன்னும்
இன்னலம் = இனிய நலம்
இன்னல் = துன்பம், தீமை
இன்னா = தீமை, துன்பம்
இன்னாங்கு = துன்பம், தீமை, கடுஞ்சொல்
இன்னாச்சொல் = கடுஞ்சொல்
இன்னாத = துன்பம் செய்வன
இன்னாதார் = பகைவர்
இன்னாது = தீது
இன்னாமை = தவறு, தீமை, துயரம், ஆகாமை, வேண்டாமை
இன்னாப்பு = துன்பம்
இன்னாமொழி = பழிச்சொல்
இன்னாரினியர் = பகைவரும் நண்பரும்
இன்னார் = பகைவர், இத்தன்மையர்
இன்னிசை = ஏழ்நரம்புள்ள வீணை, இனிய இசை
இன்னியம் = இனிய வாத்தியம்
இன்னியர் = பாடுபவர்
இன்னிலை = இல்லற ஒழுக்கம்
இன்னினி = இப்பொழுதே
இன்னும் = மறுபடியும், மேலும், அன்றியும் இது, காறும்
இன்னுழி = இன்ன இடத்து
இன்னே = இப்பொழுதே
இன்னோன் = இப்படிப்பட்டவன்
இஃது = இது