பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


= ஈ, தேனீ, வண்டு, சிறகு, அழிவு, கொடு
ஈகம் = சந்தன மரம்
ஈகை = இண்டங் கொடி, கொடை, பொன், மேகம், காடை, கற்பகம்
ஈங்கண் = இவ்விடம்
ஈங்கனம் = இவ்விடம்
ஈங்கிசை = இம்சை, வசை, கொலை
ஈங்கு = இவ்விடம், இவ்வுலகம்
ஈங்கை = இண்டங் கொடி, இண்டம் பூ
ஈசத்துவம் = அட்டமாசித்திகளில் ஒன்று, ஆணையை எங்குஞ் செலுத்துதல்
ஈசன் = சிவன், அரசன், கடவுள், குரு, பச்சைக் கருப்பூரம், மூத்தோன்
ஈசாநம் = சிவன் ஐம்முகத் தொன்று, வட கீழ்த்திசை
ஈசாநன் = கடவுள், சிவன், வட கீழ்த்திசைப் பாலன்
ஈசாநி = பார்வதி
ஈசானியம் = வடகீழ்த்திசை
ஈசி = பார்வதி
ஈசை = பார்வதி
ஈஞ்சு = ஈச்சமரம்
ஈடணாத்திரயம் = மகன் பொன் மனைவியாகிய பொருள்களிடத்துக் கொள்ளும் ஆசை
ஈடணை = ஆசை
ஈடழிதல் = வலி கெடுதல், பெருமை கெடுதல்
ஈடா தண்டம் = ஏர்க்கால்
ஈடு = உவமை, அடகு, பெருமை, வலி, வருத்தம், பதில், இடுதல், தகுதி, கனம், பிணை, கைம்மாறு, மனக்கனிவு, இடுகை, எளிவரவு
ஈட்சணம் = பார்வை
ஈட்டம் = கூட்டம், மிகுதி, தேட்டம், வலிமை
ஈட்டல் = சம்பாதித்தல், தொகுத்தல், செய்தல்
ஈண்டிய = திரண்ட
ஈண்டு = இவ்விடம், இவ்வுலகம், இப்போது
ஈண்டுதல் = நெருங்குதல், கூடுதல், குறைதல், நிறைதல், விரைதல், தொகுதல், வருதல், பெருகுதல், தோண்டுதல்
ஈண்டுநீர் = கடல்
ஈண்டை = இவ்விடம்