பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவொற்றியூர் ஞானப்

598

தொல்காப்பியர்


பது அம்மை அப்பரது வணக்கமே ஆகும். இவர் எழுதிய நூலே திருக்குறள். காலம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டு.

திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் = இவர் கமலை ஞானப்பிரகாசரின் மாணவர். சிவஞான சித்தியார் பரபக்கத்திற்கும், சங்கற்ப நிராகரணத்திற்கும் உரை எழுதியவர். திருவொற்றியூர்ப் புராணமும் இவர் பாடிய நூல். காலம். கி.பி. 16ஆம் நூற்றாண்டு.

தே

தேரையர் = இவர் அறுப்புச் சிகிச்சை செய்வதில் வல்லவர். ஒருவரது மண்டையின் கபாலத்தை நீக்கி அதில் தேரை இருந்ததைக் காட்டியவர். இக் காரணம் பற்றியே இவர் தேரையர் என்று அழைக்கப்பட்டவர். இவர் அகத்தியர் மாணவர் என்றும். தருமசெளமியர் மாணவர் என்றும் கூறப்படுவர். இவரால் பதார்த்த குண சிந்தாமணி, நோயணுகா வழி நாடிக் கொத்து முதலான நூல்களைச் செய்தவர். காலம் திட்டமாகக் கூற இயலாது.

தேவராச பிள்ளை = இவர் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மாணவர். தொண்ட மண்டல ஊரினர். பின்னர் பெங்களூரில் வாழ்ந்தவர். இவர் குசேலோபாக்கியானம், பஞ்சாக்கர தேசிகர் பதிகம், தணிகாசல மாலை முதலான நூல்களைச் செய்தவர். கி. பி. 19 ஆம் நூற்றாண்டு.

தொ

தொண்டரடிப் பொடியாழ்வார் = இவர் விப்பிரநாரணர் என்றும் கூறப்படுபவர். தேவதேவி என்றும் கோயில் தாசியின் வலையில் சிக்கியவர். திருமண்டங்குடி என்னும் இடத்தில் பிறந்தவர். திருநந்தவன கைங்கரியம் செய்து திருமாலுக்கு மாலை சாத்தி வழிபட்டவர். திருமாலை, திருப்பள்ளிஎழுச்சி என்னும் நூற்களைப் பாடியவர். கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.

தொல்காப்பியர் = தமிழ்மொழியின் மேன்மையினையும், நாகரிகப்பண்பையும் எடுத்துக்காட்டும் தொல்காப்பியம் என்னும் தலை சிறந்த நூலை எழு