பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறைமலையடிகள்

614

மறைமலையடிகள்


பெரியார். சந்தானாசாரியர் நால்வருள் ஒருவர். அருணந்தி சிவாசாரியர் மாணவர். உமாபதி சிவாசாரியரின் ஆசிரியர். வேதாகமங்களில் வல்லவர். கி.பி.13ஆம் நூற்றாண்டினர். இவர் சிவதருமோத்தரம் என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் என்றும் கூறுவர். இவரே அன்றி மற்றொரு மறைஞான சம்பந்தர் இருந்துள்ளார். இவர் சிதம்பரத்தில் வாழ்ந்த பெரியார். துறவொழுக்கம் பூண்டவர். சைவ வேளாள மரபினர். வடமொழி தென்மொழிகளை நன்கு பயின்றவர். கமலாலய புராணம், சைவ சமயநெறி, பதிபசுப் பனுவல், பரமததிமிரபானு முதலானவை இவரது நூற்கள். காலம் 16 ஆம் நூற்றாண்டு.

மறைமலையடிகள் = இவரே நாகை வேதாசலம்பிள்ளை என்பவர். சுவாமி வேதாசலம் என்றும் இவரை குறிப்பிடுவர். இவர் வடமொழி, தென்மொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஈடும் எடுப்பும் அற்றவர். சைவசித்தாந்த துண் பொருள்களைத் தெற்றத் தெளிய உணர்ந்தவர். ஆராய்ச்சித்துறையில் தலைசிறந்தவர். மறுப்புரை எழுதுதலில் மாபெரும் புலவர். இவர் உரைநடை எழுதுவதிலும், உரைவரைவதிலும், செய்யுள் இயற்றுவதிலும் தலைசிறந்தவர். இவர் பேச்சும், எழுதும் நடையும் தமிழ்ச்சுவை மிக்கனவாக விளங்கும். சைவக் குடும்பத்தில் நாகைபட்டினத்தில் பிறந்தவர். பின்னர்ச் சென்னை, பல்லாவரத்தில் சிறக்க வாழ்ந்தவர். இவர் நாகை நாராயணசாமிப் பிள்ளையிடம் இயற்றமிழ் அறிவையும், சூளை சோமசுந்தர நாயகரிடம் சித்தாந்த நூற் புலமையும் பெற்றவர். இவர் எழுதியுள்ள நூற்களில் உள்ள முகவுரையில் இவரது பன்மொழிப் புலமை புலப்படும். இவர் எழுதியுள்ள நூற்களுள் மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி என்னும் மாபெரும் நூலை ஒவ்வொருவரும் படித்தல் சாலச் சிறந்தது. தமிழ்நாட்டில் துலங்கிய இலக்கண இலக்கிய சமய ஆசிரியர்கள் காலம் அனைத்தையும இந்