பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுக முதலியார்

629

இராமச்சந்திரஞ்


ஆறுமுக முதலியார் இவர் திருப்பராய்த்துறையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருபவர். எம்.ஏ.எம்.ஓ.எல்.எல்.டி. பட்டம் பெற்றவர். தமிழ் மொழியினை எப்படிக் கற்பிப்பது என்னும் அரிய நூலை எழுதியவர். கி.பி.20 ஆம் நூற்றாண்டு. சிறந்த எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார்.

ராசமாணிக்கம் பிள்ளை.மா இவர் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றவர். எம்.ஓ.எல்.எம்.ஏ.,வித்துவான், எல்.டி. ஆகிய பட்டங்களையும் பெற்றுத் திகழ்பவர். ஆராய்ச்சி செய்வதில் பற்றுக் கொண்டு அதன் காரணமாகப் பல நூல்களை எழுதியவர். மதுரைத் தியாகராயர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து வருபவர். நல்ல பேச்சாளரும் ஆவார். இவருக்குச் சேக்கிழார் மீது அளவுகடந்த அன்பு உண்டு. அதன் காரணமாகப் பெரியபுராணத்தை நன்கு ஆராய்ந்து அந்நூல் ஒரு சிறந்த வரலாற்று நூல் என்பதை நிறுவி எழுதியவர். இவர் இளைஞர் முகல் முதியர் வரை பயிலத் தக்க நூல்களை எழுதி வருபவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளின் ஆசிரியர். மொகஞ்சதரோ என்ற நூலும் இவரால் எழுதப்பட்டது. கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

இராஜேஸ்வரி அம்மையார் இவர் சென்னைக் குயின் மேரிஸ் காலேஜில் விஞ்ஞானப் பேராசிரியையாக இருந்தவர். எம்.ஏ. பட்டம் பெற்றவர். தமிழ் மொழியில் உயர்ந்த விஞ்ஞானக் கருத்துக்களை எழுதி வெளியிட்டவர். பேசும் திறனும் படைத்தவர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

இராமச்சந்திரஞ் செட்டியார் இவர் பி.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். ராவ்பகதூர் பட்டமும் பெற்றுச் சைவசமயத்தில் அறநிலை பாதுகாப்புக் கழகக் கமிஷனராக இருந்தவர். இவரது அரிய தொண்டின் காரணமாகக் அவ்வக் கோவில்களின் பண்கள் சுவர்களை அலங்கரிப்பன