பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாண்டவராய முதலியார்

642

திருவேங்கடாசாரியார்


சித்துறை அலுவலகத்தில் தமிழ்ப்பணி செய்து வருபவர். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

தா

தாண்டவராய முதலியார் = இவர் பஞ்சதந்திரக் கதையினை உரைநடையில் எழுதியவர். இவரது நடையில் ஒரு தந்திரத்தைப் படித்து அடுத்த தந்திரத்தை வாசிக்கத் தொடங்கும் போது முன்னைய நடையினைவிடச் சிறிது தரம் உயர்ந்து காணப்படுதலை அறியலாம். இவர் சிறுவர்கட்காக இலக்கண வினாவிடை, கதாமஞ்சரி என்னும் நூற்களையும் எழுதியுள்ளார். கி. பி. 19 ஆம் நூற்றாண்டு.

தி

தியாகராய செட்டியார் = இவர் ஒரு பெருஞ்செல்வர். இவரது பார்வையில்தான் மதுரைத் தியாகராயர் கல்லூரி நடைபெற்று வருகிறது. இவர் சமய நூல்களில் பெரிதும் ஈடுபாடுடையவர். தக்க அறிஞர்களைக் கொண்டு சமய நூல்களைத் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் போதிக்குமாறு செய்து கேட்டு இன்புறுபவர். தகுதி வாய்ந்தவர்கட்கு உதவும் உதார குணமுடையவர். இவர் தமிழ்க்கலை வளரத் தமிழ்நாடு என்னும் பத்திரிகை நடந்து வருதற்கு முதற்காரணராய்த் திகழ்பவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு. தம் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நல்ல அறிவு பெற வேண்டித் தக்க பேராசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் உளம் மகிழும் வண்ணம் ஊதியத்தினை மிகுதியும் தந்து களிப்பவர்.

திருநாவுக்கரசு முதலியார் மணி = இவர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருந்தவர். பேசுந் திறனும் எழுதும் திறனும் படைத்தவர். தமிழ்ப்புலவர்களைப்பற்றி உரைநடை நூல்களை விரிவான முறையில் எழுதியவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

திருவேங்கடாசாரியார் = இவர் வைஷ்ணவ அய்யங்கார் மரபினர். வடமொழியில் நல்ல பயிற்சி பெற்றவர். எம்.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர். சென்னை