பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏங்குதல்

88

ஏந்திலை




ஏங்குதல் = ஒலித்தல், கவலைபடல், திகைத்தல், அழுதல், அஞ்சுதல், இளைத்தல்
ஏசல் = பழிமொழி, இகழ்தல்
ஏசறவு = துக்கம், அன்பு, நாணம், விருப்பம், தோத்திரம்
ஏசறுதல் = வருத்தமுறுதல், ஆசைப்படுதல், பழித்தல்
ஏசு = குற்றம், இகழ்ச்சி
ஏட = தோழன் முன்னிலை
ஏடகம் = ஆட்டுக்கடா, பட்டு, பூ , இதழ், தெங்கு, துகில்
ஏடணை = விருப்பம்
ஏடல் = கருத்து
ஏடன் = தோழன், செவிடன்
ஏடா = ஆண்பால் முன்னிலை, தோழன் முன்னிலை
ஏடி = தோழி முன்னிலே
ஏடு = பூ, பூ இதழ், பாலாடை, மென்மை, புத்தகம், பனையோலை, உடல், மேன்மை, குற்றம்
ஏடை = ஆசை
ஏட்டை = ஆசை, தளர்வு, துன்பம்,வறுமை, இளைப்பு
ஏணம் = மான், நிலைபேறு
ஏணி = அடுக்கு, பாசறை, நாடு, எண், உலகம், மான் கன்று, எல்லை
ஏண் = நிலை, பெருமை, வலிமை, திண்மை, எல்லை, உயர்ச்சி
ஏதம் = குற்றம், துன்பம், கேடு, நோய்
ஏதன் = கடவுள், மூலகாரணன்
ஏதி = ஆயுதம், வாள், துண்டம்
ஏதிலார் = பகைவர், தரித்திரர், அயலார், பரத்தையர்
ஏதின்மை = பகைமை, முன்னறியாமை
ஏது = காரணம்
ஏத்தல் = துதித்தல், புகழ்தல்
ஏத்து = ஆழமின்மை, தேக்கம், புகழ்தல்
ஏத்துதல் = துதித்தல், வணங்கல், புகழ்தல், வாழ்த்துதல், உயர்த்துக் கூறுதல்
ஏநம் = பாவம், குற்றம்
ஏந்தல் = அரசன், தேக்கம், ஆழமின்மை, பெருமை, உயர்ச்சி, ஏந்துதல், தாங்குதல், பெருமையில் சிறந்தவன்
ஏந்திலை = வேல்