பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

தமிழ் இலக்கிய வரலாறு


இன்னிலை பொய்கையார் இந்நூலைப் பாடினார் என்பர். இது அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உ ண ர் த் து வ து. நாற்பத்தைந்து வெண்பாக்களால் ஆன நூல் இது. இந்நூலில் சிவபெரு மானைப் பற்றிய குறிப்பு வருகிறது: 'ஆக்கி யளித்தழிக்குங் கந்தழியின் பேருருவே!' - 30 இந்நூலில் நடையழகு பொருந்திய நயம் கெழுமிய பாடல்களையும் காண்கிறோம். ஒத்த வுரிமையளா ஆடற் கினியளாக் குற்றம் ஒரூஉம் குணத்தளாக்- கற்றறிஞர்ப் பேணும் தகையளாக் கொண்கன் குறிப்பறிந்து பேணும் தகையினாள் பெண்.' கைந்நிலை திணைக்குப் பன்னிரண்டு பாடல்களாக ஐந்திணைக்கும் அறுபது பாடல்கள் கொண்ட நூலாகும் இது. இவ் வெண் பாக்களில் பல சிதைந்து போயின. இந்நூலின் ஆசிரியர் புல்லங்காடனார் என்பவர். இவர் காலமும் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாய் இருக்கவேண்டும் என்பர். பதினெண் கீழ்க்கணக்கு நூலைச் சார்ந்த நூல் இன் னிலையா, கைந்நிலையா என்பதில் அறிஞர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. பொதுவாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பலவும் அரிய கருத்துகளை - நீதிக் கொள்கைகளை-உணர்த்தி நிற் கின்றன.