பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கம் மருவிய காலம்

99

சங்கம் மருவிய காலம் 99 சிலப்பதிகாரம் ப 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு' என்று, சிலப்பதிகாரம் தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட பான்மையினைப் பாடினார் பாரதியார். தமிழில் வழங்கும் காப்பியங்களில் தலையாயது சிலப்பதிகாரமே. உலகக் காப்பியங்களோடு ஒப்பவைத்து எண்ணப்படும் தகுதி பெற்றது சிலப்பதிகாரமே. இந்நூல் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவப்பெற்றதால், முத்தமிழ்க் காப்பியம் என்றும், உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் வேறு பெயர் களாலும் வழங்கப்படும். சிலப்பதிகாரம் எழுந்த காரணம் செங்குட்டுவன் தன் பரிவாரங்களுடன் மலைவளம் காணச் சென்றனன். குன்றக் குறவர், கண்ணகி தம். கண்முன் விண்புலம் ஏகிய வியத்தகு காட்சியினைக் கூறினர். அருகில் அமர்ந்திருந்த சாத்தனார் எனும் புலவர் நிகழ்ந்த கதை அனைத்தையும் அறிவித்தார். இளங்கோவடிகள் கண்ணகி வரலாற்றினை எழுதத் துணிந்தார். இதனை, 'அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்.' - 55-60 என்று பதிகம் கூறுகிறது. இப் பதிகம் இளங்கோவடிகள் எழுதியதா அன்றிப் பிற்காலத்துப் புலவர் யாரேனும் எழுதிச் செரித்ததா என்பதில் ஐயப்பாடு உண்டு.