பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

தமிழ் இலக்கிய வரலாறு


யுள்ளார்.1 'மணிமேகலை துறவு' என்றும் இந் நூல் வழங்கப் படுகிறது. சில கிளைக்கதைகளும் இந்நூலில் இடம் பெறு கின்றன. --- இந்நூல் விழாவறை காதை தொடங்கி, பவத்திற மறு கெனப் பாவை நோற்ற காதை வரை முப்பது காதைகளைக் கொண்டுள்ளது. சில இடங்கள், சொல், தொடர், உவமை கள் சிலப்பதிகாரத்தோடு ஒப்புமை பெற்று வருகின்றன. 'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய்' என்னும் அடிகளில் குறளை அப்படியே பெயர்த்துக் கொடுத்தும், திருவள்ளுவர்க்கு ஏற்றம் தந்தும், ஆசிரியர் குறித்துச் செல்கிறார். பிற சமயத்தவர் கருத்துக்களை, 'சிந்தை யின்றியும் செய்வினை யுறுமெனும், வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் செய்வினை சிந்தை யின்றெனின் யாவதும் எய்தா தென்போர்க் கேது வாகவும்' என்று கண்டிக்கிறார். 'இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தே ளுலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது' என்னும் அடிகளில், நிலையாமையினை வற்புறுத்தி, அறத் தின் மாட்சியினை வலியுறுத்துகிறார். 1, டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர், மணிமேகலை முன்னுரை. ப, xxv, .