பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கம் மருவிய காலம்

107

சங்கம் மருவிய காலம் 107 இவ்வாறு பெளத்தக் கோட்பாடுகளைப் பலபடக்கூறும் இந்நூல் சங்க காலத்திற்குப் பின்னரே தோன்றியிருத்தல் கூடும். மேலும், இந்நூலின் பதினெட்டாவது காதையான உதயகுமரன் அம்பலம் புக்க காதையில், 'குச்சரக் குடிகை' (குசல குண்டிகை) குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியதென்பர். சிலப்பதிகாரத் திற்குப் பின்னரே மணிமேகலை நூல் எழுந்திருக்க வேண்டு மென்பதே அறிஞர் பலரின் கருத்தாகும். இந்த இருண்ட காலப் பகுதியிலேயே சைவ வைணவப் பெரியோர் சிலரும் சமய வாழ்வு நடாத்தினர். காரைக்காலம்மையார் இக்காலத்தே வாழ்ந்தவர், சைவ சமயத்தைச் சார்ந்த பெண்பாற் புலவர் காரைக்கால் அம்மையார் ஆவர். இவர் வரலாறு பெரியபுராணத்தில் அறுபத்தாறு பாடல்களில் கூறப்பட்டுள்ளது. இவர் இயற்றிய நூல்கள் அற்புதத் திருவந்தாதியும், திருவிரட்டை மணிமாலையும், திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டுமாகும். சிவபெரு மானின் ஒப்பற்ற உயர் நிலையினை விளக்கும் பாடல்கள் இவை. அந்தாதித் தொடையமைந்த வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாயமைந்த பாடல்கள் இவை.பக்தி நலங்கெழுமிய இப்பாடல்கள் பதினோராந் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இறைவனே எல்லாம் என்னும் கருத்தில், 'அறிவானும் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே -அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன்.' என்று அற்புதத் திருவந்தாதியில் ஒரு பாடல் அமைந் துள்ளது. இவர் சிவபெருமானிடத்தில் வைத்திருந்த