பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

தமிழ் இலக்கிய வரலாறு


- - தங்கள் சமய்த் தொண்டினைச் செய்துவந்தார்கள். பூதமங்கலம், போதி மங்கை, பொன்பற்றி, காவிரிப் பூ ம் ப ட் டி ன ம், நாகைப்பட்டினம் முதலிய இடங்க ளில் பௌத்தர்கள் ஏராளமாய்க் குடியேறி வாழ்ந்து வ ந் த ா ர் க ள். இளம்போதியார், அறவண அடிகள், மணிமேகலை இயற்றிய சீத்தலைச் சாத்தனார், சங்கமித்தி ரர், புத்தமித்திரர், தருமபாலர், திண்ணாகரர், புத்ததேவர் முதலானோர் தமிழிலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றி னர். இவருள் திண்ணாகரரும் தரும்பாலரும் நாளந்தாப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்களாக வீற்றிருந்ததாக நாம் அறிகிறோம். இவர்களுடைய சொந்த ஊர் காஞ்சிபுர மாய் இருந்தது. பெளத்தர்களின் சமயப்பிரசாரம் காரண மாகச் சில கொள்கைகள் இந்து சமயத்திலும் இடம் பெற்றன. வேல்வியில் உயிர்க் கொலையை இந்துக்கள் நீக்கியமை பௌத்தர்களுடைய தொடர்பாலேயே எனலாம். புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் அரசமரத்தை இங்கு வாழ்ந்த மக்களும் வணங்கத் தொடங்கினார்கள். இக் காலத்தில் புத்த தத்தர் என்னும் பௌத்த பெரியார் தம் மாணவி சுமதியின் வேண்டுகோட்படி அபிதருமாவ தாரம் என்னும் நூலை இயற்றினார். ஐம்பெருங் காப்பியங் களில் மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி மூன்றும் பௌத்தக் காப்பியங்களே. ஆனால், வளையாபதியைச் சிலர் சமணக் காப்பியம் என்பர். இதன் உண்மையறிய இன்று நூல் முழுதும் கிடைத்திலது. நீ கேசி உரையால், குண்டலகேசி பௌத்த நூல் என்பது தெரியவருகிறது. சமணர்கள் பௌத்தர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த காலத்திலேயே சமணரும் இங்கு வந்தனரென்பர். மௌரியப் பேரரசின் சந்திரகுப்தன் அரியணை துறந்து. துறவியாக-சந்திரகுப்த முனீந்திரனாக -பத்ரபாகு என்னும் குருவுடன் மைசூருக்கு