பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

129

பல்லவர் காலம் 129 -- - 1 அருகில் இருக்கும் சிரவணபெல்கோலா என்னும் இடத்திற்கு வந்து உயிர் துறந்ததாக வரலாற்றாசிரியர் கூறுகின்றனர். அவனுக்குப் பின்னர்ச் சமண சமயம் இந் நாட்டில் தழைத்தது சங்ககாலத்தில் இவர்களுடைய செய்திகள் பற்றி யாதொன் றும் அறிவதற்கு ஏதுக்கள் இல்லை . சங்கம் மருவிய காலத் தில் எழுந்த பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் பல, சமணர் கள் இயற்றின என்பது தெளிவாகின்றது. தேவார காலத் திற்கு முன்னர் வாழ்ந்த சமணர் அறம் முதலிய நீதிப்பொருள் களை மக்களுக்கு உரைப்பதிலேயே நாட்டம் செலுத்தினர். இவர்கள், மதுரையில் வச்சிர நந்தி சங்கத்தை நிறுவித் தமிழ்த்தொண்டு செய்துவந்தார்கள் என்பது தெரியவரு கிறது. தேவார காலத்திற்கு முன்னர் இவர்களுடைய செல்வாக்கே மிகுந்திருந்தது. ஆனைமலை இவர்களுடைய முக்கிய இடமாய் விளங்கியது. அரசர்களையும் இவர்கள் வயப்படுத்தினர். மகேந்திரவர்ம பல்லவன் திருநாவுக்கரசு நாயனாரால் சமய மாற்றம் செய்யப்படுவதற்குமுன் சமணனாய் இருந்தான். எனவே, சமணர்களுக்கு அரசியல் செல்வாக்குக் கிட்டிற்று. அதனால் அவர்கள் தங்கள் சமயக் கருத்துகளைப் பரப்புதல் எளிதாயிற்று. 'சைவ சமயம் சைய்த புண்ணியத்தின் இரு கண்களாகத் தோன்றிய அப்பர், சம்பந்தர் காலத்தில் சமணர் செல்வாக்குக் குறைந் தது. அதன் பின்னர் உலக வாழ்வில் வெறுப்பும் துறவு நிலையில் விருப்பும் கொண்டு இவர்கள் வாழ்வை நடத்தி னார்கள். ஐம்பெரும் காப்பியங்களில் சீவகசிந்தாமணியும் வளையாபதியும் இவர்களின் சமயத் தொடர்பான நூல்கள் என்பர். தமிழிலக்கணத் துறையிலும் நிகண்டுத் துறை யிலும் இவர்கள் செய்த தொண்டுபோல வேறு எவருமே செய்யவில்லை எனலாம். இவர்கள் இசை நாடகம் பற்றிய நூல்களை இழிந்தன எனத் தள்ளினார்கள். இவர்கள் காலத்தில் தமிழிலக்கியம் வடமொழிச் சாயல் பெற்றது. தமிழையும் வடமொழியையும் சரிபாதியாகக் கலந்து எழுதும் மணிப்பிரவாள நடை வழக்கிற்கு வந்தது. வட மொழிக் கருத்துகளும், புராணங்களும் தமிழில் மொழி