பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

தமிழ் இலக்கிய வரலாறு

130 தமிழ் இலக்கிய வரலாறு பெயர்க்கப்பட்டன. அக் காலத்தில் ஆண்ட பல்லவர்களும் வடமொழி வளர்ச்சியில் ஊக்கம் காட்டியதால், இவர் களுக்கு அரசியல் ஆதரவும் கிட்டியது. மேருமந்திர புராணம், சாந்தி புராணம், ஸ்ரீபுராணம் எனும் புராணங் கள் தமிழ் மொழியில் இவர்களால் இயற்றப்பட்டன. சமண முனிவர் தென்னிந்திய நாகரிகத்திற்குக் குறிப்பிடத்தக்க அளவிற்குத் தொண்டாற்றியிருக்கின்றனர் எ ன் று ம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக் குத் துணை கோலியிருக்கின்றனர் என்றும் பேராசிரியர் இராப்சன் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.1 | | | 1 ) இலக்கண நூல்கள் I புறப்பொருள் வெண்பாமாலை இந்நூல், பன்னிரு படலத்தைத் தழுவி வெட்சி முதலாகப் பெருந்திணை ஈறாகச் சொல்லப்பட்ட படலங்களை முறையே கொண்டு, ஐயனாரிதனார் என்னும் சேரர் மரபினரால் செய்யப்பட்டது. இது பழந்தமிழ் நாட்டுப் போர், வீரம், கொடை, மக்கள் வாழ்வு முதலான செய்தி களைக் கூறுகிறது; தொல்காப்பியம் புறத்திணையியலில் கூறப்பட்டிருக்கும் செய்திகளோடு சிற்சில இடங்களில் மாறுபடுகிறது. இந் நூலின்கண் அமைந்துள்ள வெண்பாக் கள் ஓட்டமும், நயமும், பொருளாழமும் கொண்டவை; பிற்கால உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப் பட்டவை. 'நூலாசிரியர் காலம் எட்டாம் நூற்றாண்டின் இறுதி' என்பர்.2 || - | 1. They (The Jains) have also played a notable part in the civilization of Southern India where the early literary development of the Kanarese and Tamil languages were due in a great measure to the labours of Jain monks. - Prof. E. J. Rapson's, Ancient India p. 66 2, திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை , இலக்கிய வரலாறு, ப. 311.